தேனி மாவட்டம் பெரியகுளம் தெய்வேந்திரபுரத்தை சேர்ந்தவர் துளசிராமன் (48). விவசாயக் கூலியான இவர், தனியாருக்குச் சொந்தமான மாந்தோப்பில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது தோட்டப்பகுதிக்குள் திடீரென நுழைந்த காட்டுமாடு துளசிராமனை முட்டித் தூக்கி வீசியதில் பலத்த காயம் அடைந்தார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்ற, சக விவசாயிகள், துளசிராமனை மீட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியகுளம் வடகரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் தோட்டப்பகுதிகளுக்கு நுழையும் விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பார்க்க: டெல்லி சிஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு சீல் வைப்பு!