தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் மூன்றாம் பாசனத்திற்காக இன்று (டிச.29) விநாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் கண்மாய்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணைக்கு நீர் வரவு 1,354 மில்லியன் கன அடியைத் தாண்டும்போது வைகை பழைய ஆயக்கட்டிற்கு தண்ணீர் வழக்கமாக திறந்து விடப்படும். அந்த முறையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் நாட்கள் மற்றும் அளவு முடிவு செய்யப்படும் என பொதுப்பணித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 64.27 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 2,569 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 2,029 கனஅடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 4,470 மில்லியன் கன அடியாக உள்ளது.
இதையும் படிங்க:மேல்மருவத்தூர் பயணம்: சுற்றுலாப் பேருந்தை சிறைப்பிடித்த பக்தர்கள்!