ETV Bharat / state

போதைப்பொருள் விற்பவர்களை பிடிக்க உதவிய மோப்ப நாய்! - போதை பொருள் விற்பனை

தேனி: கம்பத்தில் போதைப்பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பவர்களை கண்டுபிடிக்க மோப்ப நாய் உதவியுள்ளது.

dog
dog
author img

By

Published : Nov 29, 2019, 8:07 PM IST

தேனி மாவட்டம் கம்பம், உத்தமபுரம் ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு அதிகளவில் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தடுக்கும் நோக்கில், மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டார். சிறப்பு பயிற்சி பெற்ற 'வெற்றி' என்ற மோப்ப நாயை போதைப் பொருள் சோதனையில் ஈடுபடுத்தினர்.

இந்த மோப்ப நாய் பைகள் மற்றும் வாகனங்களில் மறைத்து வைத்துக் கொண்டு செல்லும் கஞ்சா கடத்தலை, வாசனையை வைத்து நுகர்ந்து பார்த்து கண்டுபிடிக்க இந்த நாய்க்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் விற்பவா்களை பிடிக்க உதவிய மோப்ப நாய்

இந்நிலையில், உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு தலைமையில், மோப்பநாய் வெற்றியின் உதவியுடன் கம்பம் வடக்குப்பகுதியில் உள்ள கோம்பைரோடு, நாககன்னியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த மூன்று பேரை மோப்ப நாய் கண்டுபிடித்தது. அவர்களைச் சோதித்ததில் மூன்று கிலோ போதைப் பொருட்களை கையில் வைத்திருந்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கம்பம் பகுதியைச் சேர்ந்த வீரமணி (27), குருசாமி (44), சிவமணி (41) என்பது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தடுப்பணை கட்டவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் - விவசாயிகள்

Intro: கம்பத்தில் மோப்பநாயுடன் காவல்துறையினர் நடத்திய கஞ்சா வேட்டையில் மூவர் கைது.
Body:          தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்துவது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது தேனி மாவட்டத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற ~வெற்றி~ என்ற மோப்ப நாய் கஞ்சா சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. பைகள் மற்றும் வாகனங்களில் மறைத்து வைத்து கொண்டு செல்லும் கஞ்சா கடத்தலை, வாசனையை வைத்து நுகர்ந்து பார்த்து கண்டுபிடிக்க இந்த நாய்க்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
         இந்நிலையில் உத்தமபாளையம் துணைக்கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு தலைமையில், போலீஸ் மோப்பநாய் வெற்றியுடன் கம்பம் வடக்குப்பகுதியில் உள்ள கோம்பைரோடு, நாககன்னியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த மூன்று பேரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் மூன்றுகிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
         Conclusion: விசாரணையில், அவர்கள் கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாயாண்டி மகன் வீரமணி (27), உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த முத்துக்கண்ணு மகன் குருசாமி (44), மற்றும் கோம்பை ரோடு பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் சிவமணி (41) எனத்தெரியவந்தது. அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.