ETV Bharat / state

கன மழை காரணமாக வீரபாண்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - The water level of Mullai Periyar Dam is gradually rising

முல்லைப் பெரியாற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் வீரபாண்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன மழை காரணமாக வீரபாண்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

author img

By

Published : Jul 14, 2022, 9:49 PM IST

தேனி: தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவானது 1,722 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையில் இருந்து வெளியேறும் நீர் கூடலூர், வீரபாண்டி ஆறு, வைகை அணை சென்று சேர்கிறது. நீரின் அளவு அதிகரிப்பால் வீரபாண்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் குளிக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து சென்றனர். அதையும் மீறி சிலர் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.