தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வைகை அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. . இதனால், அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில், நேற்று பெய்த கனமழையின் காரணமாக 71 அடி கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உள்ளது.
இதன் காரணமாக தற்போது மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 2,630 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் வைகை அணையில் இருந்து, 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதையும் படிங்க: கிடுகிடுவென உயர்ந்த வைகை,மஞ்சளாறு அணைகளின் நீர்மட்டம்- கரையோர மக்களுக்கு எச்சரிக்கை