கேரள மாநிலம் குமுளி பகுதியைச் சேர்ந்த அருணும் அவரது நண்பர் வருஷநாடு பகுதியைச் சேரந்த குமரேசனும் கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள 1ஆவது மைல் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் இருவரம் நேற்று இருசக்கர வாகனத்தில் கம்பத்திலிருந்து குமுளி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இவர்களுக்குப்பின்னால் வந்த சரக்கு வாகனம் இவர்களின் இருசக்கர வாகனத்தை முந்திச்சென்றுள்ளது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் நிலைதடுமாறி சாலையோரம் விழுந்தனர்.
அப்போது எதிர்புறம வந்த ஜீப் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சாலையோரம் இருந்த பள்ளத்தில் முட்டி நின்றது. இந்த விபத்தில் குமரேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்து காவல்துறையினர், விபத்தில் உயிரிழந்த குமரேசனின் உடலை கம்பம் அரசுமருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்ததோடு, விபத்தில் படுகாயமடைந்த குமரேசனை தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்துகுறித்து வழக்குப்பதிவு செய்த கூடலூர் தெற்கு காவல் நிலைய காவலர்கள், சரக்கு வாகனத்தின் ஓட்டுநர், ஜீப் ஓட்டுநர் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரள அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் முற்றுகை போராட்டம்!