தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்புப் பகுதிகளான கொடைக்கானல், வட்டகனல் உள்ளிட்டப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கும்பக்கரை அருவியில் கடந்த 3-ம் தேதி முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த 19 நாட்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அருவியின் நீர் பிடிப்புப்பகுதிகளில் மழை இல்லாததால் அருவிக்கு வரும் நீர் குறைந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஏற்றவாறு நீர் வரத்து சீராக வருகிறது.
இதையடுத்து, கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்து தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அருவிகளுக்கு ஆபத்தா? - ரெசார்ட்டுகள் மீது பாயப்போகும் நடவடிக்கை