ETV Bharat / state

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தேனி வேட்பாளர்கள் அஞ்சலி - Accident near bodi

தேனி: போடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு கட்சி வேட்பாளர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்தவர்களுக்கு வேட்பாளர்கள் ஆறுதல்
author img

By

Published : Apr 8, 2019, 8:04 PM IST

தேனி மாவட்டம் போடி அருகே தீர்த்தத்தொட்டி எனும் இடத்தில் வேனும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் உருக்குலைந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

விபத்தில் இறந்வர்களின் உடல்கள் நேற்றிரவு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தேனி அல்லிநகரம் நகராட்சி மின்மயனாத்தில் தகனம் செய்யப்பட்டது. அங்கு வந்த அதிமுக வேட்பாளர்கள் ரவீந்திரநாத் குமார், மயில்வேல், திமுக வேட்பாளர் சரவணக்குமார் மற்றும் அமமுக வேட்பாளர் கதிர்காமு ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். முன்னதாக, நேற்று தேனியில் நடைபெற்ற பரப்புரையின் போது உயிரிழந்தவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மௌன அஞ்சலி செலுத்தினார்.

போடி அருகே விபத்து; உயிரிழந்தவர்களுக்கு வேட்பாளர்கள் அஞ்சலி

சுப.பழனிக்குமார் - தேனி.         08.04.2019.

                போடி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் 6பேர் வரை பலி. இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வேட்பாளர்கள்.

                தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர்  வெற்றி அரசன். திமுக பிரமுகரான இவர் போடியில் உள்ள தனது மகள் பவித்ராவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதற்காக உறவினர்களுடன் நேற்று வேனில் சென்றுள்ளார். வளைகாப்பு நிகழ்ச்சி முடித்து கர்ப்பிணி பெண்ணான தனது மகள் பவித்ராவை அழைத்துக்கொண்டு தேனி நோக்கி வந்துள்ளனர். தேனிபோடி சாலையில் கோடாங்கிபட்டி அருகே உள்ள தீர்த்தத்தொட்டி எனும் இடத்தில் எதிரே அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து மோதியதில் வேன் உருக்குலைந்து தலைக்குப்பற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த வெற்றிஅரசன்(50), சிற்றரசன்(53), பேச்சியம்மாள்(65), மற்றும் சரஸ்வதி(62), ஆகிய 4பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்து மற்றும் வேனில் இருந்த லீட்டா(10), சுருளியம்மாள்(65) செல்வக்குமார்(24), விஜயக்குமார்(23), லதா(36), காசியம்மாள்(46), கருப்பாயி(42), கவிதா(40), நித்திஷா(6), சுபா(32), பவித்ரா(25), ராஜேஸ்வரி(44), பாக்கியம்(44), கலாவதி 18பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சையில் இருந்த மதுரையை சேர்ந்த 10வயது சிறுமி லீட்டா என்பவர் சிறிது நேரத்திலே சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் கர்ப்பிணி பெண்ணான பவித்ராவை பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் படுகாயமடைந்ததால் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்தது. பின்னர் அறுவை சிகிச்சை செய்து உயிரிழந்த சிசு வெளியே எடுக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்தில் பயணம் செய்த போடியை சேர்ந்த சுருளியம்மாள்(65) என்பவரும் நேற்றிரவு உயிரிழந்தார்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் நேற்று பிரச்சாரத்திற்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேனியில் நடைபெற்ற பரப்புரையின் போது மௌன அஞ்சலி செலுத்தினார்.

 இதனைத்தொடர்ந்து இறந்வர்களின் உடல் நேற்றிரவு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தேனி அல்லிநகரம் நகராட்சி மின் மயனாத்தில் தகனம் செய்யப்பட்டது.

அங்கு வந்த அதிமுக வேட்பாளர்கள் ரவீந்திரநாத்குமார். மயில்வேல், திமுக வேட்பாளர் சரவணக்குமார் மற்றும் அமமுக வேட்பாளர் கதிர்காமு ஆகியோர் அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_02_08_ACCIDENT DEATH CANDIDATES PAID TRIBUTE_VIS_7204333

2)      TN_TNI_02a_08_ACCIDENT DEATH CANDIDATES PAID TRIBUTE_VIS_7204333

3)      TN_TNI_02b_08_ACCIDENT DEATH CANDIDATES PAID TRIBUTE_VIS_7204333

4)      TN_TNI_02c_08_ACCIDENT DEATH CANDIDATES PAID TRIBUTE_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.