ETV Bharat / state

கல்வெட்டு சர்ச்சையைடுத்து, போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய ஓபிஎஸ்.மகன்.!

தேனி : தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்தரநாத்குமாரை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டு தேனியில் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்வெட்டு சர்ச்சையைடுத்து, போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய ஓ.பிஎஸ்.மகன்
author img

By

Published : May 29, 2019, 12:00 AM IST

இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி, மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ஆனால், தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் மட்டும் வெற்றி பெற்றார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன், அமமுக தங்கதமிழ்செல்வன் என எதிர்த்து நின்ற மூத்த அரசியல்வாதிகளை தோற்கடித்தார்.

தற்போது தேனி வட்டாரத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை அதிமுக கட்சியினர் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதில் சில தொண்டர்கள், ஆர்வக்கோளாறில், மத்திய அமைச்சர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் என்று போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளனர். தற்போது வரை அமைச்சரவையில் யார், யார் இடம்பெற உள்ளனர் என்கிற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. பிரதமர் மோடியே நாளை மறுநாள் தான், புதிய அமைச்சரவையுடன் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில், ரவீந்திரநாத்குமாரை மத்திய அமைச்சர் என்று குறிப்பிட்டு போஸ்டர் அடித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.

கல்வெட்டு சர்ச்சையைடுத்து, போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய ஓ.பிஎஸ்.மகன்

தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கோயில் கல்வெட்டில், ரவீந்திரநாத்குமார் எம்.பி. என்று குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அடங்குவதற்குள் தற்போது மீண்டும் போஸ்டர் சர்ச்சையில் ரவீந்திரநாத் குமார் சிக்கியுள்ளார்.

சுப.பழனிக்குமார் - தேனி.            28.05.2019.

                கல்வெட்டு சர்ச்சையை தொடர்ந்து, போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய .பிஎஸ்.மகன்.!

  தமிழக துணை முதல்வர் .பி.எஸ் மகனும், தேனி மக்களவை தொகுதி உறுப்பினருமான .பி.ரவீந்தரநாத்குமாரை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டு தேனியில் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

         17வது மக்களவைக்கான பொதுத்தேர்தல்; அன்மையில் நடந்து முடிந்தது. தேசிய அளவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பாஜக, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ஆனால் இக்கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் .பி.ரவீந்திரநாத்குமார் மட்டும் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் என மூத்த அரசியல்வாதிகளை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றதால் ஓபிஎஸ் மற்றும் அவரது மகனின் ஆதரவாளர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

      இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே தேனி அருகே கோவில் ஒன்றில் வைக்கப்பட்ட கல்வெட்டில் ரவீந்தரநாத்குமார் எம்.பி. என்று குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் விவாதப் பொருளானது. அது தொடர்பாக .பி.எஸ். மகன் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், கல்வெட்டு வைத்த ஜெயலலிதாவின் தீவர விசுவாசி  வேல்முருகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இதனையடுத்து தற்போது பாராளுமன்ற உறுப்பினராக வென்று விட்ட ரவீந்தரநாத்குமாரை மத்திய அமைச்சர் என்று அச்சிடப்பட்ட போஸ்டர்கள் அவரது ஆதரவாளர்களால் தேனியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு வருகின்றன.

     பிரதமர் மோடியே நாளை மறுநாள் தான் தனது அமைச்சரவையுடன் பதவி ஏற்க உள்ளார். மேலும் மத்திய அமைச்சரவையில் யார், யார் இடம்பெற உள்ளனர் என்கிற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் ரவீந்தரநாத்குமாரை மத்திய அமைச்சர் என ஆர்வக்கோளாறில் அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.