தேனி மாவட்டம் தேவானப்பட்டி கெங்குவார்பட்டி அருகே நேற்றிரவு கொடைக்கானலில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு மதுரைக்கு நோக்கி புறப்பட்ட பிக்கப் வேனும், கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் ஓட்டி வந்த ஆட்டோவும் கெங்குவார்பட்டி பிரிவில் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த கொடைக்கானல் சாலையில் உள்ள எஸ்டேட் பகுதியில் வசித்து வரும் சென்னையைச் சேர்ந்த கணவன் மனைவியான கமலக்கண்ணன், சந்திரிகா ஆகிய இருவரும் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர்.
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேவதானப்பட்டி காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்த இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வால்பாறையில் யானை தாக்கி ஒருவர் படுகாயம்