ETV Bharat / state

ரூ 45 ஆயிரம் செலவில் உருவான மினி ஜீப்.. வியப்பை ஏற்படுத்திய 'வில்லேஜ் விஞ்ஞானி'

Small Jeep with cheapest cost: தேனி மாவட்டத்தில் ரூ. 45 ஆயிரம் செலவில் ஒரு மினி ஜீப்பை உருவாக்கிய நபரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

theni-worker-made-a-mini-jeep-at-a-cost-of-45-thousand
45 ஆயிரம் செலவில் உருவான மினி ஜீப்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 5:47 PM IST

ரூ.45 ஆயிரம் செலவில் உருவான மினி ஜீப்

தேனி: சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவர், மண்வெட்டி, கொத்து அரிவாள் உள்ளிட்ட பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் உற்பத்தி செய்யும் பொருள்களை அருகில் உள்ள சந்தைகள், பேருந்து ஸ்டாண்டுகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு, தன்னுடைய இருசக்கர வாகனத்தின் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளார்.

இருப்பினும் இரு சக்கர வாகனத்தில் குறைந்த அளவிலான பொருள்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடிவதால், இதற்கு மாற்று வழி ஒன்றைச் செய்ய வேண்டும் என நினைத்துள்ளார். இதனையடுத்து, குழந்தைகள் ஓட்டும் கார்களைப் போன்ற சிறிய வாகனத்தை வடிவமைக்கலாம் என சில காலங்களாகத் திட்டமிட்டுள்ளார்.

அதன் வெளிப்பாடாக தன்னுடைய இரு வாகனத்தில் உள்ள உதிரிப் பாகங்களை வைத்து, ரூபாய் 45 ஆயிரம் செலவில் ஒரு மினி ஜீப்பை உருவாக்கியுள்ளார். அதற்கு ஜீப்பில் உள்ளது போல், முகப்பு விளக்கு, ஆக்ஸ்லெட்டர், பிரேக், பெடல் போன்றவற்றைத் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

இதனை உருவாக்க சுமார் ஒரு மாதம் காலம் உழைத்துள்ளார். மேலும், பாட்டுக் கேட்பதற்கு ஆடியோ சிஸ்டம், அரிவாள் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு ஜீப்பின் பின்புறத்தில் தேவையான இடம் உள்ளிட்டவற்றையும் வடிவமைத்துள்ளார்.

பல லட்சம் செலவு செய்து மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும் இளைஞர்களால் கூட இப்படியான வடிவமைப்பைச் செய்துவிட முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், பள்ளிக் கூடமே செல்லாத இந்த பெரியவர் தன்னுடைய சொந்த முயற்சியால் சின்ன ஜீப் உருவாக்கியுள்ளதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

தற்போது, தான் வடிவமைத்த ஜீப்பின் பின்பகுதியில் மண்வெட்டி, களைக் கொத்து, அரிவாள் உள்ளிட்ட பொருள்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். ஒருவரின் கற்பனைத் திறனும், படைப்பாற்றல் திறனும் இருந்தால் எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாக மாறி இருக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரனைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: செய்ததும் - செய்யத் தவறியதும்.. திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி ஓர் சிறப்புப் பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.