ETV Bharat / state

போடி அருகே பெண்ணை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்த கும்பல்! - வங்கி வேலை

தேனி: போடி அருகே திருமணமான பெண்ணிற்கு வங்கி வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைக் காட்டி பாலியல் வல்லுறவு செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளதனர்.

File pic
author img

By

Published : Jun 11, 2019, 1:49 PM IST

தேனி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தவரை கடந்த சில வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இப்பெண் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடக் கோரி புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், 'எனது கணவர் 2018ஆம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லத்திற்கு ஒப்பந்த வேலைக்காக சென்றார். அங்கிருந்து வேலை பார்க்கும் சம்பள பணத்தை குடும்ப செலவிற்காக வங்கி கணக்கில் அனுப்பிவைப்பார்.

இதற்காக சங்கராபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் புதிதாக சேமிப்புக்கணக்கு தொடங்கி எனது கணவர் அனுப்புகின்ற பணத்தை எடுத்துவந்து கொண்டிருந்தேன்.

இந்நிலையில், வங்கியில் பணிபுரியும் ஊழியரான போடியைச் சேர்ந்த முத்து சிவகார்த்திக் எனது ஏழ்மையை கேட்டறிந்து வங்கியில் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை காட்டினார்.

பின்னர் வேலை சம்பந்தமாக வங்கி உயர் அலுவலர்களை சந்திக்க வேண்டும் எனக் கூறி 2018 ஆகஸ்ட் மாதம் கம்பம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜிற்கு வரச்சொன்னார். அங்கு சென்றபோது வேலை கிடைக்க வேண்டுமெனில், தனது இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்தி பாலியல் வன்புணர்வு செய்து அதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துகொண்டார்.

பாதிக்கப்பட்ட பெண்

தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்காவிட்டால் இந்த வீடியோவை எனது கணவர், ஊரார் அனைவருக்கும் பரப்பி விடுவதாக மிரட்டினார். மேலும் முத்து சிவகார்த்திக்கின் நண்பர்களான அன்பு, பாண்டி, சதீஷ், பெயர் தெரியாத மூன்று போ் இந்த வீடியோவை காட்டி மிரட்டியதோடு எனது வீட்டிற்கே வந்து பலமுறை பாலியல் வன்புணர்வு செய்தனர்.

மேலும் தனியார் விடுதியில் வைத்தும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள். இந்த விவரத்தை எனது உறவினரான ஈஸ்வரனிடம் தெரிவித்தேன். அனைத்தையும் கேட்டறிந்தவர், எனக்கு உதவ வேண்டுமென்றால் அவரது இச்சைக்கும் இணங்க என்னை வற்புறுத்தினார்.

2018 ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் வரை என்னை 12 பேர் பாலியல் வன்புணர்வு செய்தனர். கடைசியாக இது குறித்து எனது கணவரிடம் கூறினேன். அவர் எனக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறினார்.

எனது கணவர், குழந்தைகளை இழந்து சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுவேனோ என அஞ்சி இது நாள் வரை காலம் தாழ்த்தி வந்தேன். எனவே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எனக்கு தொந்தரவு அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை அளித்திட வேண்டும்' என அதில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "2018 டிசம்பரில் போடி தாலுகா காவல் நிலையத்தில் எனக்கு அளிக்கப்பட்ட கொடுமைகள் குறித்து புகார் அளித்தோம். வாழ்க்கை பாழாகி விடும் என்று விசாரணை அலுவலர்கள் மிரட்டினர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் துறையினரால் அலைக்கழிக்கப்பட்டோம்.

இதனால் சங்கராபுரத்தை விட்டு வெளியேறி, தற்போது தேவாரம் காவலர் குடியிருப்பு அருகே வசித்துவருகின்றோம். மேலும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தோம்" என்றார்.

அதனடிப்படையில், போடி மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் வங்கியைச் சேர்ந்த முத்துசிவகார்த்திக், சிலமலையை சேர்ந்த ஈஸ்வரன், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சதீஷ், பாண்டி, ராஜபார்த்திபன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். திருமணமான பெண்ணின் ஏழ்மை நிலையை சாதகமாக்கி தொடர்ந்து அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சுப.பழனிக்குமார்  - தேனி.            11.06.2019.

     போடி அருகே வங்கி வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி, திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல், 12 பேர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை. வங்கி ஊழியர் உள்பட இருவர் கைது.

               தேனி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தவரை கடந்த சில வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இப்பெண் நேற்று முன்தினம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில்; தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடக் கோரி புகார் மனு அளித்துள்ளார்.

                அவர் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் கேரள மாநிலம் கொல்லத்திற்கு ஒப்பந்த வேலைக்காக சென்றார். அங்கிருந்து வேலை பார்க்கும் சம்பள பணத்தை குடும்ப செலவிற்காக வங்கி கணக்கில் அனுப்பி வைப்பார்;;. இதற்காக சங்கராபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் புதிதாக சேமிப்புக்கணக்கு தொடங்கி எனது கணவர் அனுப்புகின்ற பணத்தை எடுத்து வந்து கொண்டிருந்தேன். இந்நிலையில், வங்கியில் பணிபுரியும்  ஊழியரான போடியை சேர்ந்த முத்துசிவகார்த்திக் எனது ஏழ்மையை கேட்டறிந்து வங்கியில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டினார்.

                பின்னர் வேலை சம்பந்தமாக வங்கி உயரதிகாரிகளை சந்திக்க வேண்டும் என 2018 ஆகஸ்ட் மாதம் கம்பம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜிற்கு வரச்சொல்லி வேலை கிடைக்க வேண்டுமெனில், தனது ஆசைக்கு இனங்குமாறு வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து அதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து தனது ஆசைக்கு இனங்காவிட்டால் இந்த வீடியோவை எனது கணவர் மற்றும் ஊரார் அணைவருக்கும் பரப்பி விடுவதாக மிரட்டி வந்தான். மேலும் இந்த வீடியோவை அதே வங்கியில் பணிபுரியும் மற்ற ஊழியர்களான அன்பு, பாண்டி, சதீஷ் மற்றும் பெயர் தெரியாத மூன்று பேருக்கு அனுப்பி வைத்தான். இவர்கள் ஏழுபேரும் எனது நிர்வாண வீடியோவை காட்டி மிரட்டியதோடு மட்டுமல்லாமல் இரவு, பகல் என எனது வீட்டிற்கே வந்து  பல முறை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள்.

                இதனைத் தொடர்ந்து முத்துசிவகார்த்திக் மற்றும் கம்பத்தில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து அவனது நண்பன் ராஜபார்த்திபன் மற்றொரு வங்கி ஊழியர் உட்பட மூவரும் கம்பம், தேக்கடி உள்ளிட்ட இடங்களுக்கு என்னை அழைத்துச்சென்றனர். அங்குள்ள தனியார் விடுதி அறையில் மூவரும் சேர்ந்து என்னை கூட்டு பாலியல் செய்து கொடுமை படுத்தினார்கள்.

                இந்த விசயத்தை எனது கணவரிடமோ, அல்லது பெற்றோரிடமோ என யாரிடம் சொல்வதறியாது திகைத்திருந்த வேளையில், போடி சிலமலையை சேர்ந்த எனது உறவினரான போஸ் என்பவரது மகன் ஈஸ்வரனிடம் நடந்த விசயங்களை தெரிவித்தேன். அணைத்து விபரங்களை கேட்டறிந்தவர், எனக்கு உதவ வேண்டுமென்றால் அவரது ஆசைக்கு இனங்க வற்புறுத்தி வலுக்கட்டாயமாக அவரும் என்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். மேலும் இதனை செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்;டு என்னை மிரட்டத்தொடங்கினார். அதோடு மட்டுமல்லாமல், பெயர் தெரியாத அவனது நண்பர்கள் இருவரிடமும் அந்த வீடியோவை கொடுத்து அனுப்பி வைத்து அவர்களது ஆசைக்கு இனங்குமாறு கூறியுள்ளான். குடிபோதையில் வந்த இருவரும் என பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

                கடந்த 2018 ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் வரை மேற்குறிப்பிட்ட 12பேரும் என்னை பகல், இரவு என தினமும் பாலியல் தொந்தரவு செய்து வந்தனர்.

இதனையடுத்து எனது நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த கணவர் கடந்த 2018 டிசம்பர் மாதம் எனது போனுக்கு வரும் அழைப்புகளை ஆராய்ந்து வற்புறுத்தி கேட்கவே, நடந்த விசயங்கள் அணைத்தையும் ஒவ்வொன்றாக அவரிடம் எடுத்துரைத்தேன். மேலும் எனது கணவர் மற்றும் குழந்தைகளை இழந்து சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுவேனோ என அஞ்சி இன்று வரை காலம் தாழ்த்தி வந்தேன். எனவே உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எனக்கு தொந்தரவு அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை அளித்திட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

                இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், 2018 டிசம்பரில் போடி தாலுகா காவல் நிலையத்தில் எனக்கு அளிக்கப்பட்ட கொடுமைகள் குறித்து புகார் அளித்தோம். வாழ்க்கை பாழாகி விடும் என்று விசாரணை அதிகாரிகள் மிரட்டினர். தொடர்ந்து நடவடிக்கை வேண்டி காவல்துறையினரால் அலைக்கழிக்கப்பட்டோம். இதனால் சங்கராபுரத்தை விட்டு வெளியேறி, தற்போது தேவாரம் போலீஸ் குடியிருப்பு அருகே  வசித்து வருகின்றோம். மன அமைதியின்றி தவித்த எனது கணவன், இந்த நிலைக்கு காரணமானவர்களை தகுந்த ஆதாரத்துடன் பிடிக்க வேண்டுமென்று முடிவு செய்தார். தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி எனது தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர்கள் விபரம் முழுவதையும் சேகரித்தார். திரட்டிய ஆதாரங்களுடன் ஜூன் 8 ல் எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தோம்.

அதனடிப்படையில், போடி மகளிர் ஸ்டேஷன், தாலுகா ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட தனியார் வங்கியை சேர்ந்த துணை மேலாளரான போடியை சேர்ந்த முத்துசிவகார்த்திக் (30), சிலமலையை சேர்ந்த ஈஸ்வரன் (30), ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் சதீஷ், பாண்டி, ராஜபார்த்திபன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான பெண்ணின் ஏழ்மை நிலையை சாதகமாக்கி தொடர்ந்து அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு : பாதிக்கப்பட்ட பெண்ணின் பேட்டியை அனுப்பி உள்ளேன். தேவையெனில் பயன்படுத்தி கொள்ளவும். இந்த வீடியோ பிரசுரிக்கப்பட்டால் முகத்தை மறைத்து வெளியிடவும்.

Visuals & Byte  sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_01_11_WOMEN SEXUAL HARRASEMENT_VIS_7204333

2)      TN_TNI_01a_11_WOMEN SEXUAL HARRASEMENT_VIS_7204333

3)      TN_TNI_01b_11_WOMEN SEXUAL HARRASEMENT_BYTE_7204333

4)      TN_TNI_01c_11_WOMEN SEXUAL HARRASEMENT_BYTE_7204333

5)      TN_TNI_01d_11_WOMEN SEXUAL HARRASEMENT_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.