ETV Bharat / state

சிறப்புவாய்ந்த வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ரத்து

author img

By

Published : May 11, 2020, 12:28 PM IST

தேனி மாவட்டம் வீரபாண்டியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் கௌமாரியம்மன் கோயில் திருவிழா கரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் இந்த ஆண்டு தடைபட்டுள்ளது. எட்டு நாட்கள் வரை நடைபெறும் இந்த சிறப்பு வாய்ந்த வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு நடைபெறாததால் தேனி மாவட்ட மக்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர்.

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்

தேனி மாவட்டம், வீரபாண்டி கிராமத்தில் உள்ளது ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில். முல்லைப் பெரியாற்றின் கரையில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டிய வரம் அருளும் சக்தி வாய்ந்த தெய்வம் வீற்றிருக்கும் கோயிலாகக் கருதப்படும் இந்த கௌமாரியம்மன் கோயிலின் திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அன்று வாஸ்து பூஜையுடன் தொடங்கி, அடுத்த நாள் காலையில் திருக்கம்பம் நடுதல், கொடியேற்றம் எனத் தொடரும்.

தொடர்ந்து, 21 நாட்கள் விரதத்திற்கு பிறகு, எட்டு நாட்களுக்கு திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த எட்டு நாட்களும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளிப்பார். பகல் - இரவு என 24 மணி நேரமும் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அம்மன் தரிசனம் கிடைக்கப் பெறுவர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தலில் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்மிகு கௌமாரியம்மன் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். தொடர்ந்து தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், ஆயிரங்கண் பானை, பறவைக் காவடி, பால்குடம் எடுத்தல், சேத்தாண்டி வேஷம் போடுதல், ஆணி செருப்பில் நடத்தல் என தங்களது நேர்த்திக் கடன்களை பக்தர்கள் திருப்பி செலுத்துவார்கள்.

தவிர நினைத்த காரியம் நிறைவேறியவர்கள் ஆடு, கோழிக்கறி சமைத்து விருந்து படைப்பதால், கோயில் சுற்றுப் பகுதிகளில் உள்ள மண்டபங்கள் தோப்புகள் என அனைத்தும் நிரம்பி வழியும். மற்றொருபுறம் ராட்டினங்கள், சர்க்கஸ், ஆடல் - பாடல், கண்காட்சி கலை நிகழ்ச்சிகள் என இரவு முழுவதும் நடைபெறும் .

மற்றொரு புறம், அக்னி நட்சத்திரம், கத்திரி வெயிலுக்கு குளிர்ச்சியான தண்ணீரில் பொழுதைக் கழிக்கவே இளைஞர்கள் கூட்டம் முல்லைப் பெரியாற்றங்கரையில் அலைமோதும். பிற நிகழ்வுகளுக்கு வர முடியாத வெளியூர்களில் வசிப்பவர்களும், எங்கிருந்தாலும்திருவிழாவிற்கு வந்து விடுவதால், வீரபாண்டித் திருவிழாவை மதம் சார்ந்த நிகழ்வாக பார்க்காமல் உறவுகள், நண்பர்களை சந்திக்கும் நிகழ்வாக பார்க்கின்றனர் தேனி மாவட்ட மக்கள்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வீரபாண்டித் திருவிழா இந்த ஆண்டு மே 12ஆம் தேதி தொடங்கி. 19ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. ஆனால் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், கரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு திருவிழா தடைபட்டுள்ளது. இது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக வேதனைத் தெரிவிக்கிறார்கள் தேனி மாவட்ட மக்கள்.

திருவிழா நடைபெறா விட்டாலும், எப்போதும் போல் சித்திரை மாதத்தில் விரதம் இருந்து, அசைவ உணவுகளை உண்ணாமல் வீட்டில் இருந்தபடியே அம்மனை தரிசித்து கொள்கிறோம் என்றும், தொடர்ச்சியாக தீச்சட்டி, ஆயிரம் கண் பானை எடுக்கும் பக்தர்கள் இந்த ஆண்டு திருவிழா நடைபெறாததால் மீண்டும் முதலில் இருந்து தங்களது நேர்த்தி கடனை திருப்பி செலுத்தவேண்டி வரும், இதனால் தெய்வ குற்றத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும் என்றும் வேதனைத் தெரிவிக்கிறார்கள்.

குலவைச் சத்தம், கொட்டு சத்தம், அம்மன் அருள் வந்தவர்களின் பரவசம், இளைஞர்களின் ஆட்டம் பாட்டம் என ஆரவாரத்துடன் ஆண்டுதோறும் களைகட்டும் வீரபாண்டி சித்திரைத் திருவிழா, கரோனா தொற்றால் இந்த வருடம் தடைபட்டது போல், இனி வரும் காலங்களில் நடைபெறக் கூடாது என்பதே தேனி மாவட்ட மக்களின் ஒருமித்த எண்ணமாக உள்ளது.

இதையும் படிங்க : 'ஆயிரம் கிடா வெட்டு' புகழ்பெற்ற சுள்ளிக்கரடு கோயில் விழா ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.