ETV Bharat / state

விண்வெளிக்குச் செல்லும் தேனி தமிழச்சி!

தேனி: பெண்கள் நினைத்தால் எதையும் சாதித்து விடலாம் என்பதற்கு முன்னுதாரணமாகத் தமிழ் வழியில் கல்வி பயின்று விண்வெளிக்கு செல்லவிருக்கிறார் தேனியைச் சேர்ந்த உதயகீர்த்திகா.

விண்வெளிக்குச் செல்லும் தேனி தமிழச்சி!
author img

By

Published : Jul 8, 2019, 5:36 PM IST

தேனி மாவட்டம், அல்லிநகரத்தைச் சேர்ந்த தாமோதரன் - அமுதா தம்பதியரின் மகள் உதயகீர்த்திகா. தேனியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த அவர், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீதான ஈர்ப்பு காரணமாக, சிறு வயது முதலே விண்வெளி விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தார். அதன்படி 12ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன் உக்ரைன் நாட்டிலுள்ள கார்க்கியூ நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை தாமோதரன் ஒரு சாதாரண ஓவியர், தாய் அமுதா தனியார் நிறுவனத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார். குடும்பத்தால் அவ்வளவு செலவழிக்க முடியாது என்பதால் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்களின் நிதி உதவியுடன் உக்ரைனில் விண்வெளி குறித்த படிப்பை 92.5 சதவீத மதிப்பெண்களுடன் படித்து முடித்தார். இதற்கிடையே போலாந்து நாட்டின் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ஜெர்மனி, நெதர்லாந்து நாட்டின் விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்பயிற்சிக்கு சர்வதேச அளவில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து உதய கீர்த்திகா மட்டுமே தேர்வாகியிருக்கிறார். போலாந்து நாட்டில் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியில் பங்கேற்பதற்காக உடல் மற்றும் கல்வித் தகுதி முக்கியமானது. இதில் தேர்ச்சி பெறுவதற்காக தினமும் நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சி என விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து விடாமுயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

அடுத்த கட்டமாக விண்வெளி பயிற்சிக்குச் செல்வதற்காக பயணச் செலவு, பயிற்சிக் கட்டணம் என போதுமான பணம் இல்லாததால் சினிமா பிரபலங்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அளித்த நிதியின் அடிப்படையில் தற்போது பயிற்சிக்குச் செல்வதற்குத் தயாராகிவிட்டார். அவ்வாறு பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து விட்டால் அவர் விண்வெளி செல்வதற்கான வாய்ப்பு அதிகம். அதன் மூலம் விண்வெளி சென்றால் தமிழ்நாட்டிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுவார்.

விண்வெளிக்குச் செல்லும் தேனி தமிழச்சி!

இதுவரை விண்வெளிக்கு கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் என இரண்டு பெண்கள் சென்றுள்ள நிலையில் மூன்றாவதாக உதய கீர்த்திகா விண்வெளிக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். 2021ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உதய கீர்த்திகா இஸ்ரோ சார்பாக மட்டுமே விண்வெளிக்குச் சென்று இந்தியாவிற்குப் பெருமை தேடித்தர வேண்டும் என்ற துடிப்போடு இருந்து வருகிறார்.

நிலாவைக் காட்டி குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும் தாய்மார்கள், நிலாவிற்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வையும் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்தால், விண்வெளி நமது காலுக்குக் கீழே என்பதை அசாத்திய உழைப்பு மற்றும் முயற்சியால் சாத்தியப்படுத்த முடியும் என்று நிரூபித்துள்ளார் உதயகீர்த்திகா.

Intro:Body:

இந்தியாவிலிருந்து விண்வெளி பயிற்சிக்கு செல்லும் தமிழ் மாணவி

முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் உதயகீர்த்திகா. அப்படி என்ன செய்தார் அவர்... பார்க்கலாம்...

தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த தாமோதரன் - அமுதா தம்பதியின் மகள் உதயகீர்த்திகா. 12ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்த அவர், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக சிறு வயது முதலே விண்வெளி விஞ்ஞானி ஆகவேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார்.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன், உக்ரைன் நாட்டிலுள்ள கார்க்கியூ நேஷனல் ஏரோஸ்பேஸ் யுனிவர்சிட்டியில் படிப்பதற்கான வாய்ப்பு உதயகீர்த்திகாவுக்கு கிடைத்ததுள்ளது. இந்தப் படிப்புக்கு பல லட்சங்கள் செலவாகும் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தது அவரது குடும்பம். அந்தச் சூழ்நிலையில் சில நல்ல உள்ளங்கள் செய்த உதவியின் காரணமாக, உக்ரைன் நாட்டில் 92.5 விழுக்காடு மதிப்பெண்களுடன் ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ் என்ஜினியரிங் படிப்பை வெற்றிகரமாக முடித்தார் உதயகீர்த்திகா. 

பைட் 1

தாமோதரன் - உதயகீர்த்திகாவின் தந்தை

போலந்து நாட்டின் விண்வெளி பயிற்சி மையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் வாய்ப்பும் தற்போது உதயகீர்த்திகாவுக்கு கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில் 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தப் பயிற்சிக்கு, நமது நாட்டின் சார்பாக தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் உதயகீர்த்திகா. இதில் தேர்ச்சி பெறுவதற்காக தினமும் நீச்சல், உடற்பயிற்சி என கடுமையாக பயிற்சி எடுத்து வந்தார் உதயகீர்த்திகா.

பைட் 2 

அமுதா - உதயகீர்த்திகாவின் தாய்

அடுத்த கட்டமாக விண்வெளிக்குச் செல்வது தொடர்பான பயிற்சிக்கு செல்வதற்காக பயணச்செலவு, பயிற்சிக் கட்டணம் என ஏராளமாக பணம் செலவாகும் என்பதால், என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தபோது தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அளித்த உதவியினால் தற்போது பயிற்சிக்கு செல்லவும் தயாராகிவிட்டார். 

அந்தப் பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டால் விண்வெளிக்கு உதயகீர்த்திகா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு விண்வெளிக்குச் சென்றால் தமிழ்நாட்டில் பிறந்து விண்வெளிக்குச் செல்லும் முதல் நபராகவும், இந்திய அளவில் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸூக்குப் பின் விண்வெளிக்குச் செல்லும் மூன்றாவது பெண் என்ற பெருமையையும் பெறுவார் உதயகீர்த்திகா.

பைட் 3 

உதயகீர்த்திகா - விண்வெளி பயிற்சி மாணவி

நிலாவை காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் தாய்மார்கள், நிலாவுக்கு செல்ல வேண்டும் என்ற உணர்வையும் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்தால், தொடுவானம் தூரம் இல்லை என்பதைப் போல, விண்வெளியும் நம் காலுக்குக் கீழேதான். 

ஈடிவி பாரத் செய்திகளுக்காக தேனியில் இருந்து பழனிக்குமார் மற்றும் ஆசிரியர் குழுவிலிருந்து விக்னேஷ்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.