ETV Bharat / state

தேனி ஜவுளிக்கடை விவகாரம்: கடை ஊழியர்கள் தர்ணா புரியும் பெண் மீது புகார்! - Ahimsha

தேனியில் பிரபல ஜவுளிக்கடை விவகாரத்தில், புகார் அளித்த பெண் 3ஆவது நாளாக கடையின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அப்பெண் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கடையில் பணிபுரியும் ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஸ்ரீ கணபதி சில்க்ஸ் கடை விவகாரம்: கடை ஊழியர்கள் தர்ணா பெண் மீது புகார்!

author img

By

Published : Jun 3, 2022, 6:01 PM IST

தேனியில் பிரபல ஜவுளி கடையின் உரிமையாளர் மாரியப்பனின் மகனான முருகன் மீது, அதே கடையில் அழகு சாதன பொருள்கள் கடை நடத்தி வந்த பெண் ஒருவர் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்திருந்தார்.

அதில், “தேனியில் பிரபல ஜவுளிக்கடையின் உரிமையாளரின் மகனான முருகன் தன்னை காதலித்தார். இதனால் என்னிடம் தாம்பத்திய உறவும் வைத்துக்கொண்டார்.

பின்னர் என்னைத் திருமணமும் செய்துவிட்டு, தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுகிறார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து முருகன் தலைமறைவாகினார்.

தொடர்ந்து காவல் நிலையத்தில் சரணடைந்த முருகன், சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் முருகன் மீது புகார் அளித்த அதே பெண், மீண்டும் ஒரு புகார் அளித்தார்.

அதில், “தேனியில் பிரபல ஜவுளிக் கடையின் உள்ளே நான் வைத்திருந்த அழகு சாதனப் பொருள்கள் மற்றும் பணம் என சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை, கணபதி சில்க்ஸ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கொள்ளை அடித்து விட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகார் குறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புகார் கூறிய பெண், தனது வாழ்வும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டதாகக் கூறி கடந்த இரண்டு நாட்களாக கடையின் உள்ளே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். மூன்றாவது நாளான இன்றும் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று அந்த ஜவுளிக் கடையில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் ஒன்றினை அளித்துள்ளனர்.

அதில், ''பிரபல ஜவுளிக் கடையின் உரிமையாளருக்கும், புகார் கூறிய பெண்ணுக்கும் தனிப்பட்ட விரோதம் காரணமாக தினந்தோறும் சாதி அமைப்புகளை அழைத்து வந்து கடையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அப்பெண் கடையில் பணிபுரியும் ஊழியர்களை தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார்.

ஸ்ரீ கணபதி சில்க்ஸ் கடை விவகாரம்: கடை ஊழியர்கள் தர்ணா பெண் மீது புகார்!

இந்த பிரபல ஜவுளிக் கடையினை உடனடியாக மூட வேண்டும் எனவும் தினந்தோறும் மிரட்டல் விடுக்கும் பணியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த கடையில் 400க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறோம். இவர்களின் போராட்டத்தினால் நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம்.

இதனால், தங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பெண் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போலீஸ் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய பலே கொள்ளையர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.