ETV Bharat / state

ஜனநாயகம் செழித்தோங்க வாக்களித்தேன்: மூதாட்டி நெகிழ்ச்சி!

author img

By

Published : Dec 27, 2019, 11:36 AM IST

தேனி: ஆண்டிப்பட்டியில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு செய்த மூதாட்டி ஒருவர் ஜனநாயகம் செழித்தோங்கவே வாக்களித்துள்ளேன் என்று நெகிழ்ந்துள்ளார்.

தேனி உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு  உள்ளாட்சித் தேர்தல்  தேனி கடமலை மயிலை தொகுதி வாக்குப்பதிவு  theni vote pollling  senior citizen caste their vote in theni local body election
தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்றிய மூதாட்டிகள்

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, கடமலை - மயிலை ஆகிய இரு ஒன்றியங்களில் 285 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 96 ஆயிரத்து 950 வாக்காளர்களும், கடமலை - மயிலை ஒன்றியத்தில் 64,193 வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.

2000க்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்றிய மூதாட்டிகள்

வயதான முதியவர்களும் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவருகின்றனர். ஜெயசீலி என்ற 80 வயது மூதாட்டி வாக்களித்தது குறித்து பேசும்போது, ஜனநாயகம் செழித்து ஓங்கவே நான் வாக்களித்தேன் என்றும், நடப்பதற்கு சிரமப்பட்டாலும் பிறரின் துணையோடு வந்து எனது ஜனநாயகக்கடமையை ஆற்றியிருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் முறையாக நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

Intro: தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கடமலை - மயிலை ஆகிய இரு ஒன்றியங்களில் உள்ள 285 வாக்குச்சாவடிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தள்ளாத வயதிலும் ஊன்றுகோலுடன் வந்து ஜனநாயக கடமையாற்றும் வாக்காளப்பெருமக்கள்.

Body: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, கடமலை - மயிலை ஆகிய இரண்டு ஒன்றியங்களில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சி, 19ஒன்றிய கவுன்சிலர் மற்றும் கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 கிராம ஊராட்சி, 14ஒன்றிய கவுன்சிலர் உள்பட மாவட்ட கவுன்சிலர், கிராம ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு இந்த வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

இதில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 96,950 வாக்காளர்களும், கடமலை - மயிலை ஒன்றியத்தில் 64,193 வாக்காளர்கள் ஆக மொத்தம் 1,61,143பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 285வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 2086 வாக்குச்சாவடி அலுவலர்களும், கூடுதல் அலுவலர்கள் 170பேர் இருப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
காலை 7.00மணிக்கு முன்பாக வாக்குச்சாவடி முகவர்களின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவுடன் தொடங்கியது. தள்ளாத வயதிலும் ஊன்றுகோலுடனும், பிறர் உதவியுடனும் வந்து தங்களது ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக ஆர்வமுடன் வாக்காளர்கள் வருகை தந்தனர். மேலும் ஆண்கள், பெண்கள் உள்பட அனைத்து வாக்காளர்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இதில் வார்டு உறுப்பினருக்கு வெள்ளை நிறமும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு இளஞ்சிவப்பு நிறமும், ஒன்றிய கவுன்சிலருக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட கவுன்சிலரை தேர்ந்தெடுக்க மஞ்சள் நிறம் ஆகிய 4 சீட்டுக்களில் முத்திரையிடப்பட்ட வாக்குச்சீட்டுக்களை வாக்களர்கள் பெட்டியில் செலுத்தி வருகின்றனர்.

Conclusion: இந்த வாக்குப்பதிவிற்கு காவல்துறை மற்றும் ஊர்க்காவல்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த இரண்டு ஒன்றியங்களில் உள்ள 66 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.