ETV Bharat / state

'குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி தாங்கய்யா' - துப்புரவுத் தொழிலாளி கண்ணீர் மனு - Cleanup worker's suicide petition

தேனி: குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் துப்புரவுத் தொழிலாளி கண்ணீர் மல்க மனு வழங்கினார்.

worker suicide
குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி தாங்கய்யா
author img

By

Published : Mar 4, 2020, 10:00 AM IST

Updated : Mar 4, 2020, 10:37 AM IST

தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகேயுள்ள ஒண்டிவீரன் காலனியைச் சேர்ந்தவர் சேகர் (55). துப்புரவுத் தொழிலாளியான இவர் மனைவி கருப்பாயம்மாள், மகள் வாணி (18) ஆகியோருடன் வசித்துவருகின்றார்.1998ஆம் ஆண்டு நிரந்தரத் துப்புரவுப் பணியாளராக கம்பம் நகராட்சி அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி தாங்கய்யா

19 ஆண்டுளாகப் பணியாற்றி 2017ஆம் ஆண்டு தேனி அல்லிநகரம் நகராட்சியில் பணியிடைமாறுதல் பெற்று பணிபுரிந்துவந்துள்ளார். அதே ஆண்டு அல்லிநகரம் வீரப்பனார் மலைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பைச் சரிசெய்வதற்காகக் கழிவுநீர் வடிகாலில் இறங்கி சுத்தம் செய்துள்ளார்.

அப்போது, கழிவுநீர் வடிகாலிலிருந்த மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஊசி அவரது வலது கையில் குத்தியுள்ளது. இதனைச் சாதாரணமானதாக நினைத்த சேகருக்கு பின்னர்தான் அதனுடைய விளைவு தெரிய ஆரம்பித்தது. சாதாரணமான கைவலி என்று மருத்துவரை அணுகியபோதுதான் தெரிந்தது பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவுப் பணி செய்ததால் நோய்த்தொற்று ஏற்பட்டு கையின் உள்பகுதி முழுவதும் அழுகிவிட்டதாகவும், மேலும் கையை அறுவை சிகிச்சைசெய்து அகற்றிவிட வேண்டும், இல்லை என்றால் உயிருக்கு ஆபத்து எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவரின் அறிவுரையின்படி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று தனது வலதுகையை பாதி அகற்றிவிட்டார். கையை அகற்றிய ஓரிரு மாதங்களில் அவரது இடது காலும் மற்றொரு கையும் செயலிழந்துவிட்டது. இதன் காரணமாக எந்த ஒரு பணிக்கும் செல்ல முடியாமல் தனது அன்றாட கடமைகளைச் செய்வதற்குக்கூட பிறரது உதவியை நாடும் சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

இதனால் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். இதற்கிடையே கையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்கு மூன்று லட்சம் ரூபாய்வரை பணம் செலவுசெய்து கடனில் தவிப்பதாகவும், நகராட்சி சார்பாக மருத்துவம் பிடித்தம் செய்த பணம்கூட கிடைக்காமல் தனக்கு எந்த ஒரு உதவியும் இதுவரை செய்யவில்லை.

இதன் காரணமாக பிள்ளைகளின் படிப்புச் செலவிற்குக்கூட பணம் இல்லாமல் அவரையும் கூலி வேலைக்கு அனுப்பும் துயரநிலை இருக்கிறது. இது சம்பந்தமாக அரசின் உதவி வேண்டியும், குடும்ப வாழ்வாதாரத்திற்காக தனது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கடந்த இரண்டு வருடங்களாக நகராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அலையாய் அலைந்து போராடிவருகின்றார்.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த சேகர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதற்கு அனுமதி வேண்டி மனு அளித்தார். துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் நகராட்சியினர் வழங்காததாலேயே தனது கையை இழந்து உடல்நலமும் குன்றிவிட்டதாகத் தெரிவித்தார்.

அதற்குரிய நிவாரணம் கிடைக்காததால் வாழ்வாதாரத்திற்கான மாற்றுவழி இல்லாமல் வறுமையில் வாழ்வதற்கு விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

முறையான பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்த பின்பே துப்புரவுப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஆனால் இதற்கு மாறாக பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் ஈடுபட்டு கை, கால்கள் செயலிழந்த இந்தத் தொழிலாளியை முன்னுதாரணமாகக் கொண்டு துப்புரவுத் தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட சேகரின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையிலான அரசு வேலை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் தற்கொலை செய்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மூளைச்சாவு அடைந்த கவுரவ விரிவுரையாளர் உடல் உறுப்புகள் தானம்!

Last Updated : Mar 4, 2020, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.