உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள மத்திய அரசு 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் அனைத்து வர்த்தகம், கல்வி நிறுவனங்கள், வழிபாடு மற்றும் சுற்றுலாத் தளங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டது. மேலும் மத்திய, மாநில அரசுகளும் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரணத் தொகையையும் அறிவித்துள்ளது.
அந்த வகையில் அதிமுக மக்களவைத் தலைவரும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் தொகையை நிவாரணமாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளார்.