ETV Bharat / state

144 தடையை மீறியவர்களை தோப்புக்கரணம் போடவைத்த காவல் துறையினர் - ஊடரங்கு உத்தரவை மீறி உலா வந்தால் தோப்புக்கரணம்

தேனி: பெரியகுளத்தில் 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றிய நபர்களை காவல் துறையினர் தோப்புக்கரணம் போட வைத்தனர்.

Theni Lock Down Punsihement
Theni Lock Down Punsihement
author img

By

Published : Apr 8, 2020, 3:18 PM IST

கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதன் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் நோக்கத்தை புரிந்து கொள்ளாது, சிலர் அத்தியாவசிய தேவைகளின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றித் திரிகின்றனர். இவர்களை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நூதன தண்டனையை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் காந்தி சிலை அருகே இன்று காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தடை உத்தரவை மீறி அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 50க்கும் மேற்பட்டோரை மறித்து வாகன சாவியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தோப்புக்கரணம் போடவைத்த காவலர்கள்
தோப்புக்கரணம் போடவைத்த காவலர்கள்

பின்னர் தடையை மீறி வெளியே வந்த நபர்களை சாலையில் நீண்ட வரிசையாக நிற்க வைத்து, அனைவரையும் தோப்புக்கரணம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்ய வைத்தது மட்டுமல்லாமல், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரத்தில் இனிமேல் வெளியே வர மாட்டேன் என உறுதிமொழியும் எடுக்க வைத்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் மேலும் 6 பேருக்கு கரோனா: பாதிப்பு 17 ஆக உயர்வு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.