ETV Bharat / state

விவசாயிகள் வெளிநடப்பு!:நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை - நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023

தேனியில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் நில உரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆட்சியர் முன்பு கோஷமிட்டு விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

விவசாயிகள் வெளிநடப்பு!:நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை

author img

By

Published : Jun 17, 2023, 3:38 PM IST

விவசாயிகள் வெளிநடப்பு!:நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை

தேனி: தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஜூன் 16) நடைபெற்றது.

இதில், தேனி மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளைக் கூறி வந்திருந்தனர். அப்போது, விவசாய சங்கத்தினர் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும், இச்சட்டத்தால் தனியார் நிறுவனங்கள் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துகொள்கிறது என்று தெரிவித்தனர்.

இதனால், விவசாயத்திற்கு நீர் வளம் இல்லாமல் பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி மனு அளித்தனர். எனவே, இந்தச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூட்டத்தைப் புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

இதையும் படிங்க:பாஜக மாநிலச்செயலாளர் அர்த்த ராத்திரியில் கைது; அண்ணாமலை கண்டனம்!

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கத்தினர், “தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது ஏப்ரல் 21ஆம் தேதி அவசரமாக பல மசோதாக்கள் தாக்கள் செய்யப்பட்டன. அதில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023ம் ஒன்று. அதில் ஒரு நிறுவனம் கம்பெனி நிறுவ நிலம் வாங்கினால் அந்த மொத்த இடத்தில் அடங்கும் நீர்வழிப் பாதைகள், ஓடைகள் என அனைத்தையும் அந்த நிறுவனமே பெற்றுக்கொள்ளும் என்ற இச்சட்டம் மிக மோசமான ஒன்று. இது முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது. தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், நீர் நிலைகளைக் காப்பாற்றுவதை விட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது’’ எனக்கூறினர்.

காடுகளில் மலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து கோஷமிட்டுச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, வரும் ஜூன் 22ம் தேதி சென்னையில் கையொழுத்து இயக்கம் நடத்துவது என்று முடிவெடுத்துள்ளோம் என அறிவித்தனர்.

இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் உள்பட வனம், வருவாய், சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் செந்தில் பாலாஜி - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.