ETV Bharat / state

விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க கோரி பென்னிகுவிக் சிலையிடம் பெட்டிசன் கொடுத்த தேனி விவசாயிகள்..! - பென்னிகுவிக் சிலைக்கு பெட்டிசன் கொடுத்த விவசாயிகள்

John Benny Kuvik Statue: தேனி மாவட்டத்தை லோயர்கேம்பிலிருந்து பதினெட்டாம் கால்வாய் மற்றும் பி.டி.ஆர் கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கத்தினர் கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலைக்கு மனு அளித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பென்னிகுவிக் சிலையிடம் பெட்டிசன் கொடுத்த  விவசாயிகள்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 7:24 PM IST

Updated : Dec 10, 2023, 7:31 PM IST

விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க கோரி பென்னிகுவிக் சிலையிடம் பெட்டிசன் கொடுத்த தேனி விவசாயிகள்..!

தேனி: தேனி மாவட்டத்தை லோயர்கேம்பிலிருந்து பதினெட்டாம் கால்வாய் மற்றும் பி.டி.ஆர் கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கத்தினர் கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலைக்கு மனு அளித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம், முல்லை - பெரியாறு அணையில் இருந்து ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் பதினெட்டாம் கால்வாய் வழியாக விவசாய நிலங்களுக்கு பாசன வசதிகளுக்காக தண்ணீர் திறந்து விடுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் போதிய அளவு இருந்தும், கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது.

இதனால் பாசன வசதி பெறும் சுமார் 9,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீர் இன்றி காய்ந்த நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட விவசாய சங்கத்தினர் தொடர்ச்சியாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தொடர் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தேனி மாவட்டம் லோயர்கேம்பில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு மணிமண்டபம் முன்பு பாரதீய கிஷான் சங்கம் மற்றும் முல்லை சாரல் விவசாய சங்கம் சார்பில் கோஷங்கள் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், நூதனமான முறையில் கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலைக்கு மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்க முக்கிய நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 4 மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் இல்லாமல் இருக்கும் பள்ளிகள் நாளை (டிச.11) திறக்கப்படும் - அமைச்சர் பேட்டி!

Last Updated : Dec 10, 2023, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.