ETV Bharat / state

தேசியக் கொடியை பார்த்து நாட்டின் பெயரை கூறும் சிறுவன்! - சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்த தேனி சிறுவன்

தேனி: 45 நாடுகளின் தேசியக் கொடிகளைப் பார்த்து அந்நாடுகளின் பெயர்களை பிழையின்றி கூறும் இரண்டரை வயது சிறுவன், சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

தேசியக் கொடியை பார்த்து நாட்டின் பெயரை கூறும் சிறுவன்

author img

By

Published : Nov 19, 2020, 9:17 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி 8ஆவது வார்டிலுள்ள நல்லதண்ணீர் கிணற்றுப்பாதை தெருவில் வசித்துவருபவர் திவ்யா ஜீவன். இவரது கணவர் ஜீவன் மாணிக்கம். இவர் கத்தார் விமான நிலையத்தில் கடந்த ஓராண்டாகப் பணிபுரிந்துவருகிறார். இத்தம்பதிக்கு இரண்டரை வயதில் ரினேஷ் ஆதித்யா என்ற மகன் உள்ளார்.

கத்தாரில் பணிபுரியும் தனது தந்தையின் முகத்தை செல்போன் வழியாகவே பார்த்து வளர்ந்த சிறு குழந்தை ரினேஷ் ஆதித்யா, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப அவர் கூறும் விசயங்களைக் கேட்டறிந்து தனது ஞாபகத் திறனை வளர்த்துள்ளார்.

குழந்தையின் ஞாபக சக்தி மற்றும் அறிவுத் திறனை பார்த்த பெற்றோர் அவனுக்கு 36 நாடுகளின் தேசிய கொடியை காண்பித்தால், அந்த நாடுகளின் பெயர்களை திரும்ப சொல்லும் அளவிற்கு தயார் படுத்தியுள்ளனர்.

இதனை சாதனையாக அங்கீகரித்த, "கலாம் விஷன் இந்தியா 2020" என்ற அமைப்பு கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி அப்துல்கலாம் நினைவு நாள் போட்டியில் சிறந்த ஞாபக சக்தி திறன் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் (இ - சான்று) வழங்கி சிறப்பித்துள்ளனர்.

தேசியக் கொடியை வைத்து நாட்டின் பெயர் கூறும் சிறுவன்

சிறுவனின் அறிவுத்திறனை மேலும் கூர்மையாக்கும் வகையில், இந்திய பிரதமர் உள்பட குறிப்பிட்ட நாடுகளின் அதிபர்கள், விமானங்களின் உதிரிபாகங்கள் ஆகியவற்றை பார்த்தவுடன் அதன் பெயர்களை சொல்லும் அளவிற்கு தயார்படுத்தியுள்ளனர். இதனால் 45 நாடுகளின் தேசியக் கொடியை அவற்றின் வரைபடத்தில் சரியாக பொருத்துதல், இந்திய பிரதமர் மோடி உள்பட அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் என ஐந்து நாட்டின் அதிபர்கள், கூகுள் சுந்தர் பிச்சை , ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட மென்பொருள் நிறுவன தலைமை செயல் அலுவலர்கள், 7 உலக அதிசியங்கள், மோட்டார் வாகனங்களின் லோகோ மற்றும் இந்தியாவின் மத்திய அமைச்சர்கள் ஆகியோர்களது புகைப்படத்தை பார்த்தவுடன், அவர்களின் பெயர்களை பிழையின்றி சொல்லும் அளவிற்கு சிறுவன் ரினேஷ் ஆதித்யாவை அவரது பெற்றோர் தயாராக்கியுள்ளனர்.

இதனை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் என்ற அமைப்பு கடந்த செப்டம்பரில் உலக சாதனையாக அங்கீகரித்து சிறுவன் ரினேஷ் ஆதித்யாவிற்கு பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் வழங்கியுள்ளது. மேலும், உலக சாதனையாளர்கள் பட்டியல் புத்தகத்திலும் சிறுவன் இடம் பிடித்துள்ளார். இரண்டரை வயதில் தனது அசாத்திய திறமையால் உலக சாதனை படைத்துள்ள சிறுவன் ரினேஷ் ஆதித்யாவை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

சிறுவனை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்
சிறுவனை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

இது குறித்து அவரது தாயார் கூறுகையில், “சிறுவனின் ஞாபக திறனை மேலும் வளர்த்துக்கொள்வதற்காக பொது அறிவு சார்ந்த விசயங்களைச் சொல்லி, வளர்ந்து வந்தோம். தற்போது உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்திருப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்காலத்தில் இந்திய விமானப் பிரிவில் சேர்ந்து தாய் நாட்டிற்காக ரினேஷ் ஆதித்யா உழைக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்” எனத் தெரிவித்தார். சின்னஞ்சிறு வயதிலேயே தனது அசாத்திய திறமைகளால் உலக சாதனை படைத்து வரும் சிறுவன் ரினேஷ் ஆதித்யாவிற்கு தேனி மாவட்ட மக்களுடன் சேர்த்து ஈடிவி பாரத் செய்தி குழுவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

சாதனை சிறுவன் குறித்து பேசும் தாயார்

இதையும் படிங்க: நீச்சலில் புதிய உலக சாதனை படைத்த தேனி சிறுவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.