ETV Bharat / state

டிடிவி தினகரனுக்கு வரவேற்பு அளித்த தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் - Theni District AIADMK Secretary Saiyathu Khan welcomed TTV Dhinakaran

டிடிவி தினகரனுக்கு தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

அதிமுக செயலாளர் சையதுகான்
அதிமுக செயலாளர் சையதுகான்
author img

By

Published : Jul 31, 2022, 3:20 PM IST

தேனி: டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என சையதுகான் சில நாள்களுக்கு முன்பு கூறிய நிலையில் தற்போது தினகரனுக்கு அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவான கருத்தை சசிகலாவும், தினகரனும் கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோர் கருத்துகளை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும், தேனி மாவட்ட அதிமுக செயலாளருமான சையதுகான், தினகரன், சசிகலா ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும், இவர்கள் ஜெயலலிதா உடன் பயனித்தவர்கள், அவர்கள் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் அமமுக சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தினகரன் மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்தார். அப்போது ஆண்டிபட்டி கனவாய் பகுதியில் சையதுகான் மற்றும் அதிமுக நிர்வாகிகள் காத்திருந்து தினகரனை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்தனர்.

சிறிது நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த தினகரன் பின்னர் தேனிக்கு புறப்பட்டார். இந்த சந்திப்பு குறித்து சையதுகானை தொடர்பு கொண்டு கேட்ட போது, ஓபிஎஸ்ஸை வரவேற்க மதுரைக்கு செல்லும் வழியில் தினகரன் எதிர் திசையில் வந்ததாகவும், அவரை பார்த்ததும் மரியாதை நிமிர்த்தமாகவே அவரை சந்தித்து பேசியதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அரசியல் வட்டாரங்களில் இது குறித்து கேட்ட போது, சையதுகான் திட்டமிட்டே தினகரனை சந்தித்ததாகவும், ஒபிஎஸ்ஸின் உத்தரவின் பேரில் அவர் இந்த சந்திப்பினை நிகழ்த்தியதாகவும், இதற்கு பின்னால் பல்வேறு அரசியல் உள்ளது என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த சந்திப்பு குறித்து தேனியில் தினகரனை கேட்ட போது, சையதுகான் தனது நீண்ட கால நண்பர், மரியாதை நிமித்தமான சந்திப்பு. இதில் எவ்வித அரசியல் உள் நோக்கமும் இல்லை என தெரித்தார். டிடிவி தினகரனுக்கு தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து- 10 பேர் படுகாயம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.