உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழ்நாடு அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் சட்டம் - ஒழுங்கை காப்பது மட்டும் எங்களது கடமையல்ல! என திரைப்பட நடிகர்களைப் போல பேசி கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ராஜ்குமார்.
கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றிவரும் இவர், திரைப்பட நடிகர்கள் எம்.என். நம்பியார், விஜயகாந்த், பிரகாஷ்ராஜ் ஆகியோரின் குரல்களில் கரோனாவுக்கு எதிராக மிமிக்ரி செய்து அதைக் காணொலியாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தக் காணொலி அனைவராலும் பாராட்டப்படுவதோடு மட்டுமல்லாமல் வேகமாகப் பகிரப்பட்டும்வருகிறது.
இதையும் படிங்க: கரோனா காரணமாக சாத்தனூர் அணை மார்ச் 31 வரை மூடப்படும்