சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் தேனி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிவந்த ம. பல்லவி பல்தேவ் நில நிர்வாகப் பிரிவு கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தேனி மாவட்ட ஆட்சியராக ஹெச். கிருஷ்ணன் உன்னி என்பவரை நியமனம்செய்து அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவர் கடந்த 2005ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டு வரை திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிடெக் பட்டம் பெற்றார். பின்னர், உத்ராஞ்சல் மாநிலம் முசோரியிலுள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் ஜூலை 2013ஆம் ஆண்டு வரை 10 மாதங்கள் பயிற்சி முடித்தார்.
இதையடுத்து 2013ஆம் ஆண்டு ஜூலை முதல் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் உதவி ஆட்சியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் துணை ஆட்சியராகப் பதவி உயர்வு பெற்று 2014ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி கோபிசெட்டிபாளையத்தில் தொடர்ந்து பணியாற்றினார்.
இந்நிலையில், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை அரசின் நிதித் துறை இணைச் செயலாளராகப் பணியாற்றிவந்த இவர் தேனி மாவட்டத்தின் 16ஆவது ஆட்சியராக பொறுப்பேற்கவுள்ளார். ஹார்டுவார்டு பிஸினஸ் ஸ்கூலில் நிதித் துறை வணிகம், சர்வதேச பொதுத் துறை நிதி நிர்வாக மேலாண்மை படிப்பில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லஞ்சம் பெற்ற அரசு அலுவலர் பணியிடை நீக்கம் - வைரல் வீடியோ!