தேனி மாவட்டம், வீரபாண்டியைச் சேர்ந்த பெருமாள் - செல்லம்மாள் தம்பதியினரின் மகன் பழனிக்குமார் (41). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு பாண்டியம்மாள் (35) என்ற மனைவியும் ஸ்ரீஹாசினி(15) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக, கூடலூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலம், கெளகாத்தி தரங்கமேலா ராணுவ முகாமில் பீரங்கி படைப்பரிவில் பணியாற்றி வந்த பழனிக்குமார், உடல் நலக்குறைவால் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக நாளை (ஆக. 27) காலை மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து கூடலூர் கொண்டு செல்லப்பட உள்ளது.
இதையும் படிங்க...லாக்கரில் இருந்த 14 கிலோ தங்க நகைகள் திருட்டு: போலீஸ் விசாரணை