தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் கடந்தாண்டு அக்டோபரில் ஐந்து வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், பெரியகுளம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன் வழக்கு விசாரணை தேனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நாகராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி கீதா தீர்ப்பளித்துள்ளார்.
இந்த இரட்டை ஆயுளை ஏககாலத்திற்கு அனுபவிக்கவும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றவாளியை தகுந்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மேலும் ஒருவருக்கு தொடர்பு?