ETV Bharat / state

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி - தேனியில் பரபரப்பு

author img

By

Published : Feb 7, 2023, 11:12 PM IST

Theni suicide: தேனி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி- தேனியில் பரபரப்பு

தேனி: அருகே போடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது, பொட்டிப்புரம் கிராமம். இங்கு இந்திரா காலனியில் வசித்து வருபவர் ராமராஜ் (வயது 35). இவரது மனைவி வீரமணி(25), குழந்தைகள் ராஜபாண்டி(5), ஜீவிதா(3),ஈஷா ஸ்ரீ (2). இவர்கள் கேரளாவில் உள்ள காரித்தோடு என்ற பகுதியில் ஏலத்தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இவரது சொந்த ஊரான பொட்டிபுரத்தில் இவரது மனைவி மற்றும் இவரது குழந்தைகள் வசித்து வந்தனர். இந்நிலையில் இவருக்கு அதிக கடன் சுமை இருந்து வந்ததால், வீட்டில் செய்முறை விசேஷம் வைத்து, அதில் வரும் செய்முறை(வட்டியில்லா கடன்) மூலமாக கடனை அடைப்பதற்கு உண்டான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவருடைய குலசாமி கோயிலுக்கு சென்று ராமராஜூம், அவரது குழந்தைகளும் மொட்டை அடித்து விட்டு ஊருக்கு திரும்பி உள்ளனர். இன்று அவரது வீட்டில் விசேஷம் வைப்பது பற்றி மனைவியிடையே கலந்து ஆலோசித்த பொழுது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ராமராஜ் உடைய மனைவி வீரமணி ஆத்திரமடைந்து தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது வீட்டில் இருந்து, சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் மூன்று குழந்தைகளையும் உள்ளே தள்ளிவிட்டு ராமராஜ் மனைவியும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர், இவரை சமாதானம் செய்வதற்காக பின்னால் ஓடி வந்த கணவர் ராமராஜ் குழந்தைகளுடன் மனைவி கிணற்றில் விழுவதைக் கண்டு அவரும் கிணற்றில் குதித்துள்ளார். கிணற்றின் உள்ளே நீர் இல்லாத காரணத்தினால் கிணற்றில் விழுந்த ஐந்து நபர்களும் பலத்த காயமடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த ஐவரையும் படுகாயத்துடன் மீட்டனர். மீட்கப்பட்ட ஐவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கொண்டு செல்லும் வழியிலேயே ராமராஜ் உடைய குழந்தைகள் ஜீவிதா, ஈஷா ஸ்ரீ ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
பின்னர், போடி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:'அப்பா காசு இல்லப்பா'- குடிபோதையில் போலீசாரிடம் சிக்கிய இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.