ETV Bharat / state

ஊரடங்கால் முடங்கிய பழங்குடியின மக்கள்: உதவிய நீதிபதிகள் - Advice to Judges

தேனி: பெரியகுளம் அருகே ஊரடங்கு உத்தரவால் முடங்கிய பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை நீதிபதிகள் வழங்கினர்.

பழங்குடியின பெண் ஒருவருக்கு  அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நீதிபதிகள்

author img

By

Published : Apr 18, 2020, 11:14 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது செல்லாங்காலணி. பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்துவருகின்றனர். கரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பெரியகுளத்தில் கரோனா பெருந்தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து காய்கறி சந்தைகள் மற்றும் மளிகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பொதுமக்களின் இல்லத்திற்கே நேரடி விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் செல்லாங்காலணி பகுதி பழங்குடியின மக்களுக்கு நீதிபதிகள் குழு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் அப்துல் காதர், ஜியாபுதீன், வெங்கடேசன் உள்ளிட்டோர் இணைந்து தலா ரூ.1,200 மதிப்பிலான மளிகை பொருள்களை 50 குடும்பங்களுக்கு வழங்கினர்.

பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நீதிபதிகள்

அதனைத் தொடர்ந்து அவர்கள், கரோனா பெருந்தொற்று பரவாமல் இருப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ள ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து, வீட்டிலேயே தனித்திருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு பொது இடங்களுக்கு செல்லும்போது, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து இருக்க வேண்டும் என அறிவுரை கூறினார்கள்.

இதையும் படிங்க: மனித நேயத்தை மறந்து தக்காளிப் பழங்களை அள்ளிய மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.