ETV Bharat / state

இலவசமாக சிக்கன்-65 அளித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு! - The Chicken Breeders Farmers Association provided free Chicken 65 to the public

தேனி: பிராய்லர் கோழியால் கரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் வெளிவரும் வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்க வந்த கறிக்கோழி வளர்ப்போர் விவசாய சங்கத்தினர், பொதுமக்களுக்கு இலவசமாக சிக்கன்-65 அளித்தனர்.

The Chicken Breeders Farmers Association provided free Chicken 65 to the public

author img

By

Published : Mar 16, 2020, 6:32 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனோ வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. அதன் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதனிடையே பிராய்லர் கோழி மூலம் கரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இதனால் கறிக்கோழி சாப்பிடுவதை பொதுமக்கள் குறைத்து வருவதால் அதன் விலையும் முட்டையின் விலையும் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளன.

இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் கறிக்கோழியால் கரோனா பரவாது என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக பல அதிரடி விலைக் குறைப்புகளையும் இலவசமாக மக்களுக்கு சிக்கனை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

அந்த வகையில் தேனி மாவட்ட கறிக்கோழி வளர்ப்போர் விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். அதற்கு முன்னதாக ஆட்சியர் அலுவலகம் முன்பு இலவசமாக பொதுமக்களுக்கு சிக்கன்-65 கொடுத்து நூதன முறையில் கவனத்தை ஈர்த்தனர். அங்கு பாதுகாப்பில் இருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்.

பொதுமக்களுக்கு இலவசமாக சிக்கன்-65

இதனயைடுத்து தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆட்சியரிடம் அளித்த மனுவில், சமூக வலைதளங்களில் பிராய்லர் கோழி குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வரும் விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது வாழ்வாதாரத்தைக் காத்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் கர்ப்பிணியிடமிருந்து குழந்தைக்கு பரவாது: ஆய்வில் தகவல்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.