ETV Bharat / state

'அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் கோடிக்கணக்கில் பணம் எடுப்பேன்..!' - தங்க தமிழ்ச்செல்வன் - தங்கதமிழ்செல்வன்

தேனி: "திமுக ஆட்சிக்கு வந்ததும் காவல்துறையை என்னிடம் கொடுத்தால், தற்போதுள்ள அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்து ஊழல் செய்து சேர்த்த கோடிக்கணக்கான பணத்தை மீட்டு தருவேன்" என்று, தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்க தமிழ்ச்செல்வன்
author img

By

Published : Jul 21, 2019, 11:51 PM IST

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் இன்று அமமுக, அதிமுகவினர் ஆகிய மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், "டிடிவி தினகரன் கட்சியை மக்கள் விரும்பவில்லை. அந்தக் கட்சியைப் பற்றி இங்கு நான் பேசமாட்டேன். செத்த பாம்பை அடிக்க விரும்பவில்லை. தேனி மக்களவைத் தேர்தலில் அதிமுக 550 கோடி செலவு செய்துள்ளது. பணத்தை இறைத்து தன் மகனை வெற்றி பெற வைத்துள்ளார் ஓபிஎஸ்" என்று குற்றஞ்சாட்டினார்.

தங்க தமிழ்ச்செல்வன்

மேலும் பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்த பின்பு காவல் துறையை மட்டும் என் வசம் கொடுங்கள். தற்போது அமைச்சர்கள் வீட்டில் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்துக் கொடுக்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டுவர முடியும்" என்றார்.

Intro: திமுக ஆட்சிக்கு வந்ததும் காவல்துறையை என்னிடம் கொடுங்கள், தற்போதுள்ள அமைச்சர்களின் வீடுகளில் அதிரடி சோதனை செய்து ஊழல் செய்து சேர்த்த கோடிக்கணக்கான பணத்தை மீட்டு தருகிறேன்..
தேனியில் நடைபெற்ற இணைப்பு விழாவில் தங்கதமிழ்செல்வன் பேச்சு.

Body: தேனி அருகே உள்ள வீரபாண்டியில் நடைபெற்ற அமமுக, அதிமுகவினர் ஆகிய மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், தங்கதமிழ்செல்வனின் ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைந்தனர். இந்த கூட்டத்தில் பேசிய தங்கதமிழ்செல்வன், சாதாரண தொண்டனான என்னுடைய அழைப்பை ஏற்று தலைவர் ஸ்டாலின் வருகை தந்ததற்கு நன்றியை தெரிவித்தார். அதிமுக கட்சி ஊழல் மிகுந்த கட்சியாக மாறி விட்டது. டிடிவி தினகரன் கட்சியை மக்கள் விரும்பவில்லை. அந்தக் கட்சியைப் பற்றி இங்கு நான் பேசமாட்டேன். செத்த பாம்பை அடிக்க விரும்பவில்லை என அமமுகவை கடுமையாக சாடினார்.
தேனி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 550 கோடி செலவு செய்துள்ளது. பணத்தை இறைத்து தன் மகனை வெற்றி பெற வைத்துள்ளார் ஓபிஎஸ். திமுக தலைவர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு எனக்கு சட்ட மேலவை உறுப்பினராக வாய்பாபளித்து காவல் துறையை மட்டும் என் வசம் கொடுங்கள். தற்போது அமைச்சர்கள் வீட்டில் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்துக் கொடுக்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்தை ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவர முடியும் என்று பேசினார்.

Conclusion: இந்த கூட்டம் நிறைவுற்றவுடன், ஸ்டாலினுக்கு ஏலக்காய் மாலை மற்றும் வாள் பரிசளிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.