ETV Bharat / state

டாடா காபி தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் தர்ணா!

தேனி: வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது என வலியுறுத்தி டாடா காபி தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

டாடா காபி தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் தர்ணா

author img

By

Published : Nov 20, 2020, 7:48 AM IST

தேனி மாவட்டம் ஜெயமங்கலம் பகுதியில் இயங்கி வரும் டாடா காபி தொழிற்சாலை ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வட்டியில்லா கடனுதவி, குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 மாதங்களாக ஆலை நிர்வாகத்தினரிடம் தொழிலாளர்கள் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் கடந்த 5 நாள்களாக கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் தொழிலாளர்கள் கையிலெடுத்தனர். இதனிடையே தொழிற்சாலை நிர்வாகம் வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்த நேற்று நடவடிக்கை எடுத்தது.

தகவலறிந்த தொழிலாளார்கள் ஆலையின் முன்பாக திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். முன் அனுபவம் இல்லாதவர்களைப் பணியில் அமர்த்தினால் அவர்களின் கவனக் குறைவால் அமோனியம் எனும் விஷவாயு வெளியேறக் கூட வாய்ப்புள்ளது.

பழைய தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்து வந்த ஜெயமங்கலம் காவல் துறையினர் தொழிலாளர்கள், ஆலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்துவதை கைவிடுவதாக ஆலை நிர்வாகம் கூறியதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் ஆலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டாடா காபி தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் தர்ணா!

டாடா காபி தொழிற்சாலையில் சுமார் 800க்கும் மேற்பட்டோர் தற்காலிக, நிரந்தர தொழிலாளர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:‘காபி போட்டு கொடுத்தவர்களுக்கு, பதவி கொடுத்தவர் கலைஞர்’ - எ.வ. வேலு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.