ETV Bharat / state

'இந்தியப் பொருளாதாரத்தவிட டபுள் மடங்கு தமிழ்நாடு வளருது' - ஒபிஎஸ் பெருமிதம்

author img

By

Published : Dec 1, 2019, 12:58 PM IST

தேனி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.1 விழுக்காடக இருந்தாலும், தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

O paneerselvam
O paneerselvam

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சாரல் விழா நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சார்பில் நடைபெறும் இவ்விழாவினை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து சுற்றுலா, வனம், தோட்டக்கலை, பட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

சுருளி சாரல் விழா தொடக்க நிகழ்ச்சி

இவ்விழாவில் பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், 2014 முதல் 2018 வரை ஐந்தாண்டுகள் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருவதாகத் தெரிவித்தார். அத்துடன் ஆண்டுதோறும் தேனி மாவட்டத்திற்கும், சுருளி அருவிக்கும் நாற்பது லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாகவும், தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி, வைகை அணை, சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி, சுருளி அருவி, சின்னசுருளி, போடிமெட்டு, குரங்கனி, டாப்ஸ்டேசன் போன்ற புகழ்வாய்ந்த சுற்றுலா தலங்கள் மற்றும் சூழல் சுற்றுலா பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளை சுற்றுலாத் துறை செய்துவருவதாகவும் தெரிவித்தார்.

வெல்லமண்டி நடராஜன் பேச்சு

விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு கல்வி, மக்கள் நல்வாழ்வு துறையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது எனவும் தொழிற்துறையில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது எனவும் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், நெல் உற்பத்தியில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஒரு லட்சம் டன்னுக்கு மேல் தமிழ்நாடு உற்பத்தி செய்து மத்திய அரசின் கிருஷி கர்மா விருதை பெற்றுள்ளது எனப் பெருமிதத்துடன் கூறினார்.

பன்னீர்செல்வம் பேச்சு

பொருளாதார மந்த நிலையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.1 விழுக்காடக இருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.2 விழுக்காடாக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தார் பன்னீர்செல்வம்.

இவ்விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் விலையில்லா வீட்டுமனைப் பட்டா, அம்மா இரு சக்கர வாகனம், விலையில்லா மடிக்கணினி, வேளாண் இடுபொருட்கள் உள்பட 551 பயனாளிகளுக்கு ரூ. 3.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வழங்கினர்.

இதையும் படிங்க: அமித்ஷாவை கேள்விக்கணைகளால் தாக்கிய பிரபல தொழிலதிபர்!

Intro: தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றம் 8.2சதவீதமாக உயர்ந்துள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.

Body: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இன்று சாரல் விழா நடைபெற்றது. சுற்றுலாத்துறை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவினை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமார், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழாச்சிகளை துவக்கி வைத்தனர்.
மேலும் சுற்றுலா, வனம், தோட்டக்கலை, பட்டு வளர்ச்சி உள்ளிக பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டு சிறப்புரையாற்றினர்.
இவ்விழாவில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், 2014 முதல் 2018 வரை 5ஆண்டுகள் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், தேனி மாவட்டத்திற்கும், சுருளி அருவிக்கும் 40லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி, வைகை அணை, சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி, சுருளி அருவி, சின்னசுருளி, போடிமெட்டு, குரங்கனி, டாப்ஸ்டேசன் போன்ற புகழ்வாய்ந்த சுற்றுலா தலங்கள் மற்றும் சூழல் சுற்றுலா பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளை சுற்றுலாத்துறை செய்து தருகிறது.
சுற்றுலா தலங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன், மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுத்திட வேண்டும், வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்தோடு சுற்றுலா சென்று நம்மை நாம் புதுப்பித்து கொள்ள வேண்டும், உள்ளிட்ட சுற்றுலா உறுதிமொழிகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர், தமிழகம் கல்வி, மக்கள் நல்வாழ்வு துறையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தொழிற்துறையில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நெல் உற்பத்தியில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஒரு லட்சம் டன்னுக்கு மேல் தமிழகம் உற்பத்தி செய்வதால் மத்திய அரசின் கிருஷி கர்மா விருதை பெற்றுள்ளது. மேலும் பொங்கல் திருநாளுக்காக அரிசி, பருப்பு, முந்திரி உள்ளிட்ட பொருட்களுடன் சேர்த்து தற்போது ஆயிரம் ரூபாய் வழங்கபடுகிறது.
உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் 4.1 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றம் 8.2சதவீதமாக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தார். இதற்கு காரணம் தமிழகம் அனைத்து துறைகளிலும் மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்திருப்பதாகக் கூறினார்.

Conclusion: இதனையடுத்து பல்வேறு துறை சார்பில் விலையில்லா வீட்டுமனைப் பட்டா, அம்மா இரு சக்கர வாகனம், விலையில்லா மடிக்கணினி, வேளாண் இடுபொருட்கள் உள்பட 551 பயனாளிகளுக்கு 3.81கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வழங்கினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.