ETV Bharat / state

இந்திய பாகிஸ்தான் எல்லையில் தமிழக ராணுவ வீரர் பலி! - ராணுவ முகாம்

தேனி: இந்திய எல்லையில் உள்ள ராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தேனியைச் சேர்ந்த வீரர் உயிரிழந்துள்ளது அவரது குடும்பத்தினர், ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

man death
man death
author img

By

Published : Jan 9, 2021, 6:35 PM IST

பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சேர்ந்த குருசாமி என்பவரது மகன் ஆறுமுகம். இந்திய ராணுவத்தில் 18 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர், இன்னும் 3 மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளார். தற்போது நாயக் எனும் பதவியில் இருக்கும் ஆறுமுகம், ஜம்மு–காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவருடன் சேர்த்து 10 வீரர்கள் அங்கு தங்கியிருந்தனர்.

இந்நிலையில், 3 நாட்களுக்கு முன் ஆறுமுகம் தங்கியிருந்த முகாமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் பலத்த தீக்காயமடைந்த அவர், ஜம்முவில் உள்ள ராணுவ மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் நேற்று உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையறிந்த ராணுவ வீரர் ஆறுமுகத்தின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெரும் சோகத்தில் ஆழந்துள்ளனர். ஆறுமுகத்தின் உடல் விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டு நாளை காலை அவரது சொந்த ஊரான வடுகபட்டியில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தந்தை பேசாததால் மகள் தூக்கிட்டுத் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.