தேனி: அருணாசலப் பிரதேசத்தில் நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் லெப்டினட் கர்னல் வி.வி.பி.ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் மேஜர் ஜெயந்த்(33) தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்தவர்.
மதுரையில் பள்ளி மற்றும் கல்லூரி கல்வி பயின்ற ஜெயந்த், தேசிய மாணவர் படை ராணுவ பிரிவில் பயிற்சி பெற்று பல்வேறு நிலைகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர் ஆவார். மேலும், அண்டர் ஆபீஸர் என்னும் ரேங்கிங்ல் தேசிய மாணவர் படை ராணுவ பிரிவில் "C சான்றிதழ்" பெற்றவர்.
இதனைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள ஆபிஸர்ஸ் ட்ரைனிங் அகாடமி (Officers Training Academy, Chennai) மூலம் தேர்வாகி இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் குடியிருந்த இவர், பணி நிமித்தமாக டெல்லியில் வசித்து வந்த நிலையில், அவரது பெற்றோர் சென்னை ஓஎம்ஆர் பகுதியில் வசித்து வருகின்றனர்.இன்னும் 2 ஆண்டுகளில் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வடமாநில ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மேஜர் ஜெய்ந்தின் உடல் நாளை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமானநிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அவர்களது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேஜர் ஜெய்ந்த் - செல்லா தம்பதிக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை இல்லை என்று அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மேஜர் ஜெயந்த் உயிரிழந்த தகவலைக் கேட்டு அவரது உறவினர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் ராணுவ வீரர்கள் லெப்டினட் கர்னல் வி.வி.பி.ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆகியோரின் வீரமரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/lVzAJpVPKh
— TN DIPR (@TNDIPRNEWS) March 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/lVzAJpVPKh
— TN DIPR (@TNDIPRNEWS) March 17, 2023மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/lVzAJpVPKh
— TN DIPR (@TNDIPRNEWS) March 17, 2023
தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்: இதனிடையே, மேஜர் ஜெய்ந்த் மரணத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் செய்தியில், "அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் உயிரிழந்த செய்திக் கேட்டு, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். ராணுவ வீரர் ஜெயந்த்-க்கு எனது வீரவணக்கத்தை செலுத்துகிறேன். அவரது பிரிவால் வாடும் சக ராணுவ வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாட்டு மக்கள்ளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Arunachal Helicopter crash: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தேனியை சேர்ந்த மேஜர் ஜெயந்த் மரணம்!