ETV Bharat / state

மனைவி மீது சந்தேகம்: குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றவர் மரணம் - Father Died who attempted suicide with child in theni

தேனி: மனைவி மீது சந்தேகப்பட்டு பெண் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றவர் உயிரிழந்தார்.

வீரபாண்டி காவல் துறை
வீரபாண்டி காவல் துறை
author img

By

Published : Oct 10, 2020, 1:23 PM IST

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள பூமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (34). இவரது மனைவி ஜெயப்பிரியா. இவரது இரண்டு பெண் குழந்தைகள் பூவிகா(6), ரித்தீஸ்கா (4). லாரி ஓட்டுநரான ராஜ்குமார் மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் சண்டையிட்டுவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது மனைவி மீது சந்தேகப்பட்டு நேற்று (அக். 09) அரளி விதையை அரைத்து குடித்த ராஜ்குமார், அதனை இரண்டாவது மகளான ரித்தீஷ்காவுக்கும் கொடுத்து குடிக்கவைத்துள்ளார்.

உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் பார்த்து இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராஜ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ரித்தீஷ்காவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் அளிக்கப்பட்டுவருகின்றது.

இது குறித்து வீரபாண்டி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.