தேனி: கம்பம் சாலையில் அமைந்துள் பிரபல வணிக வளாகத்தில் துணிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளை, கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், பெண்கள் அழகு சாதனக் கடைகள் உள்ளன. இந்த வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் இருந்த வீட்டு அலங்கார பொருட்கள் கடையில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ அருகில் உள்ள பெண்கள் அழகு சாதன கடை மற்றும் பெயிண்ட் கடை மற்றும் அருகில் உள்ள ஒரு கடையிலும் பரவியது.
இதுகுறித்து தகவலறிந்த தேனி தீயணைப்புத்துறை அலுவலர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக தீப்பிடித்த நேரத்தில் கடையில் ஆட்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த சேதமும் இன்றி விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக இந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தினால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் ஆகின. பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடவு பணிகள் பாதிக்கப்படாமலிருக்க தற்காலிக தடுப்பணை கட்டிய விவசாயிகள்