ETV Bharat / state

மீன் வளர்ப்புக்கு கண்மாய்கள் ஏலத்தில் இரு தரப்பினரிடையே திடீர் மோதல்; விரட்டியடித்த போலீஸ்

தேனியில் மீன் வளர்ப்புக்கு கண்மாய்கள் ஏலம் விடுவதில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதல் அடிதடியாக மாறியது. மோதலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் விரட்டி அடித்தனர்.

கண்மாய்கள் ஏலத்தில் இரு தரப்பினரிடையே திடீர் மோதல்

author img

By

Published : Jan 5, 2023, 10:52 PM IST

கண்மாய்கள் ஏலத்தில் இரு தரப்பினரிடையே திடீர் மோதல்

தேனி: ஆண்டிப்பட்டி வைகை அணை பகுதியில் உள்ள மீன்வள உதவி இயக்குனர் அலுவலகத்தில், மாவட்ட மீன்வளத்துறை சார்பில் கண்மாய்களில் மீன் வளர்ப்பதற்காக கண்மாய்கள் ஏலம் நடைபெற்றது. மாவட்ட மீன்வளத்துறைக்கு உட்பட்ட ஒன்பது கண்மாய்களை 5 ஆண்டுகளுக்கு ஏலம் விடுவதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, அதிக தொகை கேட்பவர்களுக்கு கண்மாய்கள் குத்தகைக்கு விடப்படும்.

அதன் படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட ஏலதாரர்கள், இன்று நடைபெற்ற ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலம் தொடங்கி குள்ளபுரம் கிராமத்திற்கு உட்பட்ட, சிறுகுளம் கண்மாய் ஏலத்தின் போது ஏலம் முறையாக நடக்கவில்லை என கூறி ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைடையே மற்றொரு தரப்பினருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வைகை அணை காவல்துறையினர், அடிதடியில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். ஏலத்தில் நடைபெற்ற மோததால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. மறு ஏலம் குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என்று மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஒரு கேக்குக்கு இவ்வளவு அக்கப்போரா: திருச்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.