ETV Bharat / state

'போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள்' - ஆய்வில் பகீர் தகவல்! - குழந்தைகள் நலக்குழு ஆய்வு

தேனி: போதை பழக்கத்திற்கு பள்ளி மாணவர்கள் அடிமை ஆவதாக குழந்தைகள் நலக்குழுவினரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள்
author img

By

Published : Jul 3, 2019, 7:06 PM IST

தேனி அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சிலர் புகையிலை, சிகரெட் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கோட்டூர், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளியின் அருகாமையில் உள்ள பெட்டிக்கடைகளில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள்

அதில் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பதாக ஒரு சில கடைகள் கண்டறியப்பட்டு, அவற்றில் உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பூதிப்புரம் பகுதியில் நடத்திய ஆய்வில் பள்ளி சீருடையில் உள்ள மாணவர்கள் சிலர் மறைவான இடங்களில் அமர்ந்து புகையிலையில் கஞ்சாவை சேர்த்து அதனை பயன்படுத்துவது தெரியவந்தது.

பூதிப்புரத்தை சேர்ந்த  மூதாட்டி பேச்சியம்மாள்(70)
பூதிப்புரத்தை சேர்ந்த மூதாட்டி பேச்சியம்மாள்(70)

இது தொடர்பாக மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், பூதிப்புரத்தை சேர்ந்த பேச்சியம்மாள்(70) என்ற மூதாட்டி போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் மூதாட்டியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Intro:         தேனி அருகே கஞ்சா போதை பழக்கத்திற்கு ஆளாகும் பள்ளி மாணவர்கள். குழந்தைகள் நலக்குழுவினரின் ஆய்வில் அதிர்ச்சி.
Body:         தேனி அருகே உள்ள அரசுப் பள்;ளிகளில் மாணவர்கள் சிலர் புகையிலை, சிகரெட் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை பயன்படுத்துவதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கோட்டூர், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளியின் அருகாமையில் உள்ள பெட்டிக்கடைகளில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பதாக ஒரு சில கடைகள் கண்டறியப்பட்டு அவைகள், உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர்கள் மூலம் சோதணை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பூதிப்புரம் பகுதியில் நடத்திய ஆய்வில் பள்ளி சீருடையில் உள்ள மாணவர்கள் சிலர் மறைவான இடங்களில் அமர்ந்து புகையிலையில் கஞ்சாவை சேர்த்து அதனை பயன்படுத்துவது தெரியவந்தது.
         இது தொடர்பாக மாணவர்களி;டம் நடத்திய விசாரணையில், பூதிப்புரத்தை சேர்ந்த பேச்சியம்மாள்(70) என்ற மூதாட்டி விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சம்பந்தபட்ட மூதாட்டியின் மீது வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல தலைவர் சுரேஷ்குமார் தெரிவிக்கையில், பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் போதைப்பொருட்கள் உபயோகத்திற்கு அடிமையாவது கவலையளிக்கின்றது. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதோடு மட்டுமல்லாமல், உடல்நலம் பாதிப்படைகிறது. கஞ்சா பயன்படுத்திய மாணவர்களுக்கு கண்களுக்கு கீழ் சதை தடித்தும், கை, கால்கள் நடுங்கிய நிலையில் உடல்நிலை பாதிக்கபட்டு வருகிறது.
         Conclusion: மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வரவேண்டும் எனத்தெரிவித்தார்.                  
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.