வடுகபட்டி இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் சீதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான 31ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. பகலிரவு ஆட்டமாக லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, பொள்ளாச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்றன.
இறுதிநாளான நேற்று சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும் திருச்சி தமிழ்நாடு காவல் துறை அணியும் மோதின. அதில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 25 - 21, 25 - 18 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
கலாம் திட்டத்தை நிறைவேற்ற சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்
இறுதியாக நடைபெற்ற லீக் போட்டிகளில் பொள்ளச்சி எஸ்.டி.சி. கல்லூரி அணி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி, திருச்சி தமிழ்நாடு காவல் துறை அணிகள் ஆகிய மூன்று அணிகளும் லீக் சுற்றில் நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றதால் அவர்கள் வெற்றிபெற்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்ற அணி தீர்மானிக்கப்பட்டது.
அதில் பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லூரி அணி முதல் இடத்தையும், திருச்சி தமிழ்நாடு காவல் துறை அணி இரண்டாம் இடத்தையும், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. அதனைத் தொடர்ந்து வெற்றிபெற்ற அணிகளுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி கோப்பைகளையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார்.