ETV Bharat / state

இந்த தேர்தல் துரோகத்திற்கும் தர்மத்திற்கும் இடையே நடக்கும் யுத்தம் -தமிழ் செல்வன் தேனியில் சிறப்பு பேட்டி! - theni constituency

தேனி: பிரச்சார சுற்று பயணம், தேர்தல் பரப்புரை, கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, என்ற பரபரப்பிற்கு நேரத்திற்கிடையே தங்கதமிழ் செல்வன் நமது ஈடிவி பாரத்துக்காக சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

தமிழ் செல்வன் தேனியில் சிறப்பு பேட்டி
author img

By

Published : Apr 2, 2019, 10:41 AM IST

அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரும், அமமுக கொள்கைப் பரப்பு செயலாளருமான தங்கதமிழ் செல்வன் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடுகின்றார். இந்நிலையில் ஈடிவி பாரத்துக்கு அவர் சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது,

திண்டுக்கல்-சபரிமலை ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்துதல், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைளுக்கு முன்னுரிமை அளிக்க இருகிறேன்.

மேலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கப்படுவதற்கான வழிவகை செய்யப்படும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் தேனி தொகுதியில் தொழிற்சாலைகள் அமைத்து தரப்படும். தற்போது நடக்ககூடிய மக்களவை தேர்தல் துரோகத்திற்கும் தர்மத்திற்கும் இடையே நடக்கும் யுத்தம் ஆகும்.

இதற்கு முன்னர் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு கூட தொகுதிப் பக்கம் வராதவர்கள். தொகுதியின் வளர்ச்சி நிதியை சரியாக மக்களுக்கு செலவழித்தார்களா என்றும் தெரியவில்லை. சட்டமன்ற உறுப்பினராக தான் இருந்த காலகட்டத்தில் வளர்ச்சி நிதியை மக்கள் பயன்பாட்டிற்கு செலவழித்துள்ளேன்.

தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக முல்லை பெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அவ்வப்போது வந்து செல்பவர்கள் நாங்கள் இல்லை, தொடர்ந்து மக்கள் சேவை செய்து வருவதால் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Intro: ஓபிஎஸ் - ஈபிஎஸ் துரோகம், தினகரன் தர்மத்தின் பக்கம் உள்ளார். தேர்தலில் அமமுக வெற்றி பெறுவது உறுதி, என தங்க தமிழ் செல்வன் தேனியில் சிறப்பு பேட்டி.

Body: தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரும், அமமுக கொள்கை பரப்பு செயலாளருமான தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகின்றார். பிரச்சார சுற்று பயணம், தேர்தல் பரப்புரை, கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, என்ற பரபரப்பிற்கு இடையே காலையில் நடைபயிற்சியும் மேற்கொண்டு வருகின்றார். அது சமயம் அங்கிருக்கின்ற பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்து வருகிறார். இதனிடையே இன்று காலை தேனியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அவர், நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்வதை தினமும் கடைபிடிப்பதாகவும், இதனால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறினார். தொடர்ந்து அரசியல் நிகழ்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், திண்டுக்கல் - சபரிமலை ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்துதல், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைளுக்கு முன்னுரிமை அளிக்க இருப்தாக கூறினார்.
மேலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தேனி தொகுதியில் தொழிற்சாலைகள் அமைத்து தரப்படும் என்ற தொகுதியின் வளர்ச்சிக்கான தனது திட்டங்களை தெரிவித்தார்.
துரோகத்திற்கும், தர்மத்திற்கும் நடக்கின்ற இத்தேர்தலில் மக்கள் புதிய தலைமையை எதிர்பார்க்கின்றனர். ஓபிஎஸ் - ஈபிஎஸ் துரோகம், தினகரன் தர்மத்தின் பக்கம் உள்ளார். எனவே புதிய தலைமையாக, எங்களை மக்கள் நம்புவதாகக் கூறினார்.
மேலும் இதற்கு முன்னர் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு கூட தொகுதிப்பக்கம் வராதவர்கள். தொகுதியின் வளர்ச்சி நிதியை சரியாக மக்களுக்கு செலவழித்தார்களா என்று தனக்கு தெரியாது. சட்ட மன்ற உறுப்பினராக தான் இருந்த காலகட்டத்தில் வளர்ச்சி நிதியை மக்கள் பயன்பாட்டிற்கு செலவழித்தாகத் தெரிவித்தார்.
தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக முல்லை பெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் ஆண்டிபட்டி பகுதி மக்களின் பல ஆண்டு கேரிக்கையான திப்பரேவு அணைத்திட்டத்தை எம்.பியாகி வெற்றி பெற்றதும் நிறைவேற்றப்படும் என்றார்.
தேர்தலில் யார் போட்டி என்பதை இறுதி எஜமானர்களாகிய மக்கள் தீர்மானிப்பார்கள். மற்றவர்களை போல் தேனிக்கும், பெரியகுளத்திற்கும் அவ்வப்போது வந்து செல்பவர்கள் நாங்கள் இல்லை, தொடர்ந்து மக்கள் சேவை செய்து வருவதால் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை தெரிவித்தார்.

Conclusion: பேட்டி : தங்கதமிழ்செல்வன் (தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர், அமமுக)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.