திருநெல்வேலி: தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் கடந்த 6ஆம் தேதி அன்று முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று (அக்டோபர் 9) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு, வள்ளியூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குச்சாவடி
இத்தேர்தலில் மொத்தம் மூன்று லட்சத்து 25 ஆயிரத்து 826 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அவர்களுக்காக மொத்தம் 567 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு, 39 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
தேர்தல் ஏற்பாடுகளைப் பொறுத்தவரை நான்காயிரத்து 516 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை இரண்டாயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதையும் படிங்க: பதுங்குக் குழியில் 15 நாள்கள்... பகத் சிங் பதுங்கிய வீடு!