ETV Bharat / state

தேனி அருகே கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத மறுக்கப்பட்ட மாணவி - hayagreeva vidhyalaya school

தேனி: ஆண்டிபட்டி அருகே தனியார் பள்ளி ஒன்று பள்ளிக்கட்டணம் செலுத்தாததால், மாணவியை தேர்வுக்கு அனுமதிக்காமால் பள்ளியில் இருந்து வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவி
author img

By

Published : Sep 13, 2019, 8:45 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த இலக்கியா - ஆனந்தன் தம்பதிகளின் மகள் யுகிதா ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். யுகிதாவின் தந்தை ஆனந்தன் விவாகரத்து பெற்றுப் பிரிந்து சென்று விட்ட நிலையில், இலக்கியா தனது மகளைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்து வருகிறார்.

எல்.கே.ஜி முதல் ஏழாம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து வரும் யுகிதா நடப்பாண்டில் கல்விக்கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ரூ.25 ஆயிரம் பள்ளிக்கட்டணம் செலுத்தப் பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்தை யுகிதாவின் தாயார் செலுத்தியுள்ளார்.

பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவி

இந்நிலையில் மீதித்தொகையையும் உடனே கட்டவேண்டும் என்று கூறி இன்று நடைபெறும் காலாண்டுத்தேர்வை எழுதவிடாமல் மாணவியைப் பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ளது பள்ளி நிர்வாகம். இதனால் பள்ளி வாசலில் சீருடை மற்றும் புத்தகப்பையுடன் அழுதுகொண்டே நின்றிருந்தார் மாணவி. தகவலறிந்த வந்த மாணவியின் தாயார் இலக்கியா, பள்ளிக்கு வந்து கண்ணீர் மல்க மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

கல்விக் கட்டணம் செலுத்தாத காரணத்தால் மாணவியைத் தேர்வு எழுத அனுமதிக்காமல் பள்ளியை விட்டு வெளியேற்றிய சம்பவம் கடமலைக்குண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro: ஆண்டிபட்டி அருகே பள்ளிக்கட்டணம் செலுத்தாதால், தேர்வுக்கு அனுமதிக்காத தனியார் பள்ளி. கண்ணீருடன் பள்ளி வாசல் முன்பாக காத்திருந்த மாணவி.
Body: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் ஹயக்ரீவா என்ற தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த இலக்கியா -ஆனந்தன் தம்பதிகளின் மகள் யுகிதா ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். யுகிதாவின் தந்தை ஆனந்தன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்ட நிலையில், இலக்கியா தனது மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறார், எல்.கே.ஜி முதல் ஏழாம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து வரும் யுகிதா நடப்பாண்டில் கல்விக்கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ரூ.25 ஆயிரம் பள்ளிக்கட்டணம் செலுத்த பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்தை யுகிதாவின் தாயார் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் மீதித்தொகையையும் உடனே கட்டவேண்டும் என்று கூறி இன்று நடைபெறும் காலாண்டுத்தேர்வை எழுதவிடாமல் மாணவியை பள்ளியை விட்டு வெளியேற்றியது, நிர்வாகம். இதனால் பள்ளி வாசலில் சீருடை மற்றும் புத்தகப்பையுடன் அழுதுகொண்டே நின்றிருந்தார். தகவலறிந்த மாணவியின் தாயார் இலக்கியா பள்ளிக்கு வந்து கண்ணீர்மல்க அழுது கொண்டே வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

Conclusion: கல்விக் கட்டணம் செலுத்தாத காரணத்தால் மாணவியை தேர்வு எழுத அனுமதிக்காமல் பள்ளியை விட்டு வெளியேற்றிய சம்பவம் கடமலைக்குண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.