ETV Bharat / state

கேரளாவிலிருந்து தமிழ்நாடு வரும் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு!

author img

By

Published : Mar 14, 2020, 2:58 PM IST

தேனி: கொரோனா வைரஸ் எதிரொலியால் கேரளாவில் இருந்து தேனி மாவட்டம் வழியாக வரும் அனைத்துப் பேருந்துகளுக்கும் சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளித்த சுகாதாரத் துறையினர்

தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி வழியாக தேனி வந்தடைந்து மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ், பறவைக் காய்ச்சல் பீதி அதிகம் இருப்பதால் அங்கிருந்து தமிழ்நாடு வரும் பேருந்துகளுக்கு எல்லைப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கேரளாவிலிருந்து தேனி வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் இன்று ஈடுபட்டனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சியின் சுகாதாரத் துறையினர் 10க்கும் மேற்பட்டோர், பேருந்துகளின் உள்புறம், வெளிப்புறம் பகுதிகளில் நாசினி தெளித்தனர். மேலும், பயணியர், ஓட்டுநர், நடத்துநர் இருக்கைகளில் கிருமி நாசினிகளைத் தெளித்தனர்.

பேருந்து நிலையத்தில் பயணியர் காத்திருக்கும் அறைகள் உள்ளிட்ட அனைத்து பொதுவெளிப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

இதையும் படிங்க: கொரோனாவை எதிர்க்க நாங்க ரெடி - நீங்க ரெடியா? - அரசு மருத்துவமனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.