உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள சலவை, சலூன் தொழிலாளர்கள் 6,300 பேருக்கு ரூ. 63 லட்சம் மதிப்பில் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
அதன் தொடக்க விழா பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த அத்தியாவசியத் தொகுப்புகளில் அரிசி, பருப்பு, மசாலா பொருட்கள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், அதில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய கே.என். நேரு