ETV Bharat / state

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது! - Prohibited lottery ticket

தேனி: பெரியகுளம் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

arrest
arrest
author img

By

Published : Dec 17, 2020, 8:19 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அதிகளவில் நடைபெற்றுவருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் உத்தரவின்பேரில் காவல் துறையினர் பெரியகுளம் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பெரியகுளம் வடகரை பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்த தென்கரையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை காவல் துறையினர் விசாரணை செய்தனர். இதில் அவர் மறைத்துவைத்திருந்த தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிந்த பெரியகுளம் காவல் துறையினர் குற்றவாளியைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்திய பிறகு சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கைலாசாவுக்கு 3 நாட்கள் இலவச விசா - நித்யானந்தாவின் அதிரடி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.