ETV Bharat / state

துப்பாக்கியை காட்டி மிரட்டிய நிருபர் கைது - அழகம்மாளின் கணவர் கணேசன்

தேனி மாவட்டத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நிருபரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharatதுப்பாக்கியை காட்டி மிரட்டிய நிரூபர் கைது - துப்பாக்கி பறிமுதல்

author img

By

Published : Nov 1, 2022, 9:58 AM IST

Updated : Nov 1, 2022, 10:11 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.வாடிப்பட்டி ஊராட்சியின் ஆறாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் அழகம்மாள். இவர் அவரது வார்டு பகுதிகளில் முறையான தூய்மை பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என தொடர்ச்சியாக அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் குற்றம்சாட்டி வந்தார்.

இதில் ஆத்திரமடைந்த அழகம்மாளின் கணவர் கணேசன் மற்றும் அவரது நண்பர் வல்லரசு இருவரும் சேர்ந்து பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் வல்லரசு என்பவர் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த துப்பாக்கி ஒன்றை எடுத்து காட்டி மிரட்டி விட்டு தனது இடுப்பில் வைத்துக் கொண்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இதனை பாண்டியனின் உறவினர்கள் அவர்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாண்டியன் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வல்லரசு என்பவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக புகார் அளித்தார்.அதன் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல்துறையினர் வல்லரசை கைது செய்து அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில் வல்லரசு என்பவர் போலீஸ் புலனாய்வு மாத இதழ் என்ற இந்திய அரசால் அனுமதி பெறாத மாத இதழில் பணிபுரிந்து வருவதாக தெரிய வந்துள்ளது.மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியின் உண்மை தன்மை குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆறு வயது சிறுமியை ‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ செய்த நபர் கைது

Last Updated : Nov 1, 2022, 10:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.