ETV Bharat / state

கேரளாவிற்கு கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி தேனியில் பறிமுதல்! - கேரளாவிற்கு கடத்த முயன்ற 11டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தேனி: தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு லாரியின் மூலம் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசியை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கடத்திச் சென்ற ரேஷன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
author img

By

Published : Nov 8, 2019, 1:05 PM IST

தமிழ்நாடு-கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள குமுளி சோதனைச்சாவடியில் தேனி மாவட்ட காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை சோதனை செய்த காவல் துறையினர் அதில் 50 கிலோ எடையுள்ள 220 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதைக் கண்டறிந்தனர்.

பின்னர், லாரியை ஓட்டிவந்த கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டத்தைச் சேர்ந்த பினிஷ் (36), அதேப் பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ஜெயராஜ் (30) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம் கோம்பை, உத்தமபாளையம், கம்பம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தரகர்கள் மூலமாக குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி, கேரளாவிற்கு கடத்திச் சென்று விற்பனை செய்துவருவது தெரியவந்தது.

கடத்திச் சென்ற ரேஷன் அரிசி பறிமுதல்

இதையடுத்து, சட்டவிரோதமாகக் கேரளாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட 11 டன் ரேஷன் அரசி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், லாரி ஓட்டுநர் பினிஷ், லாரி உரிமையாளர் ஜெயராஜ் ஆகியோரை கைது செய்த தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க : திருச்சி விமான நிலையத்தில் ரூ. 10.70 லட்சம் மதிப்புள்ள தங்கம், சிகரெட்டுகள் பறிமுதல்

Intro: தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 11டன் ரேஷன் அரிசி குமுளி சோதனைச் சாவடியில் பறிமுதல். கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது.
Body:         தமிழக - கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள குமுளி சோதனைச்சாவடியில் தேனி மாவட்ட காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஓட்டி வந்த லாரியை சோதனை செய்து பார்த்தபோது அதில் 50 கிலோ எடையுள்ள 220 மூடை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
பின்னர் லாரியை ஓட்டி வந்த கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டத்தை சேர்ந்த பினிஷ் (36) மற்றும் அதே பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் ஜெயராஜ் (30) ஆகியோரிடம் விசாரணையில், தேனி மாவட்டம் கோம்பை, உத்தமபாளையம், கம்பம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில்; தரகர்கள் மூலமாக குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து சட்டவிரோதமாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட 11டன் ரேசன் அரசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து செய்யப்பட்டன. இது குறித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, லாரி ஓட்டுனர் பெனிஸ், லாரி உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்பட்ட லாரி ஆகியவைகள் ஒப்படைக்கப்பட்டது.
         
Conclusion: இதுகுறித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து உத்தமபாளையத்தில் உள்ள அலுவலகத்திற்கு லாரியை கொண்டு சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.