ETV Bharat / state

ராகுல் காந்தி பங்கேற்கும் மேடை சரிந்தது: சீரமைப்பு பணி தீவிரம்! - மக்களவை தேர்தல்

தேனி: ராகுல் காந்தி இன்று பங்கேற்க இருந்த பொதுக்கூட்ட மேடையின் மேற்கூரை சரிந்து விழுந்ததையடுத்து, சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Rahul gandhi elction meeting stage roof damage in theni
author img

By

Published : Apr 12, 2019, 10:58 AM IST

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தேனியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதில் தேனி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மகாராஜன், சரவணக்குமார் ஆகியோருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.

ராகுலின் வருகையையொட்டி தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தேனி-பெரியகுளம் புறவழிச்சாலையில் அன்னஞ்சி விலக்குஅருகே பொதுக்கூட்டத்திற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும்போது மேடையின் மேற்கூரை நேற்று மாலை சரிந்து விழுந்தது. இதில் பணியாளர்கள், அலுவலர்கள் என யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து மேடையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

ராகுல் காந்தி பங்கேற்கும் மேடை சரிந்தது: சீரமைப்பு பணி தீவிரம்!

Intro: தேனியில் நாளை ராகுல் காந்தி பங்கேற்க இருந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட விழா மேடையின் மேற்கூரை சரிந்து விழுந்தது. சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Body: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நாளை தேனியில்
நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். தேனி பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியடும் திமுக வேட்பாளர்கள் மகாராஜன், சரவணகாகுமார் ஆகியோருக்கு ஆதரவு திரட்டி இக்கூட்டத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
ராகுலின் வருகையையொட்டி தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தேனி - பெரியகுளம் புறவழிச்சாலையில் அன்னஞ்சி விலக்கு அருகே தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டு பொதுக்கூட்டத்திற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வரும் மத்திய அரசின் கீழ் இயங்கும் சிறப்பு பாதுகாப்பு பிரிவு போலீசார் இந்த விழா மேடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து பாதுகாப்பு பணிகளை அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் விழா மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகையில் மேடையின் மேற்கூரை இன்று மாலை சரிந்து விழுந்தது. இதில் பணியாளர்கள், அதிகாரிகள் என யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேடையின் பக்கவாட்டில் மேற்கூரையை தாங்கும் அடித்தளம் பலமானதாக அமைக்கப்படாததால் பாரம் தாங்காமல் இரும்பு குழாய்கள் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிறப்பு பாதுகாப்பு படை போலீசார், அரசு அதிகாரிகள் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் நேரில் வந்து பார்வையிட்டனர்.
சரிந்து விழுந்து மேற்கூரையை சரி செய்யும் பணியில் சுமார் 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Conclusion: ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சியின் விழா மேடை நாளை சரிந்து விழுந்திருந்தால் என்னவாயிருக்கும் என்ற பதற்றத்துடனே அங்கிருந்தவர்கள் பீதியில் இருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.