ETV Bharat / state

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட அனுமதி மறுப்பு - ஓபிஎஸ் ஊரில் வெடித்த சர்ச்சை! - காவல்துறை சர்ச்சை கடிதம்

தேனி:பெரியகுளம் அருகே உள்ள தென்கரை கிளை நூலகத்தில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடினால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என விழாவிற்கு அனுமதி மறுத்து காவல்துறை வழங்கியுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

police-permission-refused-for-periyar-birthday-function
author img

By

Published : Sep 17, 2019, 5:48 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை கிளை நூலகத்தை அப்பகுதி மக்களும் பள்ளி மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலகத்தில் பெரியார், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

அந்தவகையில் இந்த ஆண்டும் பெரியார், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இன்று விழா கொண்டாடப்பட இருந்தது. கூடவே,தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர் விஜயராஜுக்குப் பாராட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. இவ்விழாவிற்கான அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது.

police permission refused for periyar birthday function
விழா அழைப்பிதழ்

மேலும், இவ்விழாவிற்கு அனுமதி கோரி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தென்கரை காவல்துறையினரிடம் மனு கொடுத்திருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று கூறி அதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை காவல்துறையினர் கொடுத்துள்ளனர்.

அக்கடிதத்தில்,'தென்கரை கிளை நூலக வளாகம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய இடம் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

police permission refused for periyar birthday function
காவல் துறை சார்பில் வழங்கப்பட்ட கடிதம்

இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறும் போது," அண்ணாவும்,பெரியாரும் பிரச்னை ஏற்படுத்தக்கூடியவர்களா? அனுமதி மறுத்ததற்கான காரணம் அபத்தமாக உள்ளது" என்று ஆதங்கத்தோடு கூறுகின்றனர். பெரியார் பிறந்தநாள் விழாவிற்கு அனுமதி மறுத்த சம்பவம் பொதுமக்களிடையேவும், சமூகவலைதளங்களில் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க:

தேசிய மொழியாகுமா இந்தி? - அமித் ஷா பேச்சால் சர்ச்சை

Intro: பெரியார் பிறந்தநாள் விழா! சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும்.! பெரியகுளம் காவல்நிலைய கடிதத்தால் சர்ச்சை.!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தென்கரை கிளை நூலக வளாகத்தில் பெரியார் மற்றும் அண்ணா பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட இருந்தது. மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி, மாறுவேடப் போட்டி என களைகட்ட இருந்த விழாவிற்கு அதிரடியாக அனுமதி மறுத்துள்ளது காவல்துறை.! அதற்கு காவல்துறை தெரிவித்த காரணம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தென்கரை கிளை நூலகம். அப்பகுதி மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் கிளை நூலகத்தில் அடிக்கடி மாணவ மாணவிகளுக்கான நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அந்த வகையில், பெரியாரின் 141வது பிறந்தநாள் விழா மற்றும் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா இன்று நடத்தப்பட இருந்தது. கூடவே, தமிழக அரசின் நல்லாசிரியர் டாக்டர் இராதகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர் விஜயராஜ் அவர்களுக்கு பாராட்டு விழாவும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான விழா அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. இதனை அறிந்த தென்கரை காவல்துறையினர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தக் கூடாது என கூறியது மட்டுமல்லாமல், அதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை கொடுத்துள்ளது.
அக்கடிதத்தைப் பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பேரதிர்ச்சி.! அக்கடித்தில், தென்கரை கிளைநூலக வளாகம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தக் கூடிய இடம் என்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் அனுமதி மறுக்கப்படுகிறது.! என அதில் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மாணவ - மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தியும், மாறுவேடப் போட்டி நடத்தியும், நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவருக்கு பாராட்டுவிழா நடத்தியும் அமைதியான முறையில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்கு எந்த சம்பந்தமும் இல்லாமல், நிகழ்ச்சி நடந்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் எனக்கூறி அனுமதி மறுத்திருக்கிறார்கள்.
பெரியாரும், அண்ணாவும் பிரச்சனை ஏற்படுத்தக் கூடியவர்களா? அனுமதி மறுத்ததற்கான காரணம் அபத்தமாக உள்ளது.!" என ஆதங்கத்தோடு கூறுகின்றனர். இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் கேட்ட போது, "நிகழ்ச்சியில் பிரச்சனை இல்லை. அந்த இடம் தான் பிரச்னை.! அதனால் தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.!" என்கின்றனர்.
Conclusion: அமைதியான முறையில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் யார் பிரச்சனை செய்யப்போகிறார்கள். பெரியார், அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.